சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சாமானிய மக்களுக்கு எதிராக செயல்படும் மாஃபியாக்களை இரும்பு கரம் கொண்டு கைது செய்ய வேண்டும். தமிழக முதல்வருக்கு மக்கள் தேசம் கட்சியின் தலைவர் ஆசை தம்பி சேலத்தில் வலியுறுத்தல்.
சாமானிய மக்கள் வாழ முடியாத இடமாக சேலத்தை சிதைத்துள்ள மாஃபியாக்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் தேசம் கட்சியின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் தேசம் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் அடைக்கலம், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெய் பீம் கிருஷ்ணன் மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர் பிரேம்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட அமைப்பாளர் கலைவாணன் வரவேற்புரையும், சேலம் மாநகர் மாவட்ட அமைப்பாளர் வீராணம் அம்பேத் மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஊனத்தூர் துரை ஆகியோர் முன்னிலை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் தேசம் கட்சியின் தலைவர் ஆசை தம்பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். சேலம் மாவட்டம் உட்பட தமிழக முழுவதும் ரேஷன் அரிசி கடத்தலை முற்றிலுமாக தடுத்து அதை கள்ளத்தனமாக பாலிஷ் செய்யும் ஆலைகளை சீல் வைத்து இழுத்து மூடி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தி பணி நீக்கம் செய்வதோடு மட்டுமல்லாமல் உடனடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும், நீர் வழிகளை நஞ்சாகும் சேகோ ஆலைகள் மற்றும் சாயப்பட்டறைகளை கண்டுபிடித்து அவைகளை சீல் வைத்து இழுத்து மூடவும் அதன் உரிமையாளர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் கடைகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அதில் ஈடுபட்டுள்ள நபர்கள் அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற மக்கள் தேசம் கட்சியினரின் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு சேலம் மாநகர காவல் துறை உதவி ஆணையர் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததும், ஆர்ப்பாட்டம் நடத்த விடாமல் அவர்களை கைது செய்யும் முனைப்போடு காத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களின் நலனுக்கு எதிராக செயல்படும் மாபியாக்களை கண்டித்து சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் இரும்பு கரம் கொண்டு தங்களை அடக்க முற்பட்டதை போல, அரசு அதிகாரிகளின் ஒப்புதலோடு தமிழகத்தில் வளம் வந்து கொண்டிருக்கும் இது போன்ற மாபியாக்களை தமிழக அரசு இரும்பு கடன் கொண்டு கைது செய்ய வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அளவில் மிகப்பெரிய அளவிலான போராட்டம் விரைவில் நடத்தப்படும் என்றும் மக்கள் தேசம் கட்சியின் தலைவர் ஆசை தம்பி எச்சரிக்கை விடுத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் சுலைமான் உட்பட மாநில மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: