ஈரோட்டில் வரும் 22ம் தேதி அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்களான 102, 108ல் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
102 சேவையில் சுகாதார ஆலோசனை அதிகாரியாகவும், 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளராகவும் பணிபுரிவதற்கான வேலை வாய்ப்பு முகாம் வருகிற 22ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அமைந்துள்ள டிபி ஹாலில் நடக்கிறது.
102ல் சுகாதார அதிகாரியாக பணிபுரிய அடிப்படை தகுதிகளான, பிஎஸ்சி நர்சிங், ஜி என் எம், ஏ என் எம் முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 19 முதல் 30க்கு முகாமல் இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.
108ல் மருத்துவ உதவியாளர்களுக்கான அடிப்படைத் தகுதிகளான, பிஎஸ்சி நர்சிங். அல்லது ஜி என் எம், ஏ என் எம், டி எம் எல் டி (12 ஆம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைஃப் சயின்ஸ், பிஎஸ்சி, ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, இவைகளில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு தேர்வு அன்று 19க்கு குறையாமலும் 30க்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.16,020 வழங்கப்படும். மருத்துவ நேர்முகம் உடற்கூறியியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பான, மற்றும் மனிதவளத்துறை நேர்முகத் தேர்வுகள் நடைபெறும்.
முகாமில் தேர்வு தேர்வு செய்யப்படுபவர்கள் 50 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் விவரங்கள் அறிய 7338894971, 8925941108 எண்களை தொடர்பு கொள்ளலாம் என 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 coment rios: