சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா. பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை மேயர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சேலம் கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் நல்லி தலைமையில் நடைபெற்ற விழாவில், சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், திமுக பொதுக்குழு உறுப்பினருமான அமான் என்கின்ற நாசர்கான் உள்ளிட்டோர் விருந்தினர்களாக கலந்து கொண்டு பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழாவை தொடக்கி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் விளையாட்டு விழாவிற்கான தீபம் ஏற்றப்பட்டு, தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் கலந்துகொண்ட மாணவர்கள் ஆர்வத்துடன் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி விளையாடினர். இது மட்டுமில்லாமல் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், திமுக பொதுக்குழு உறுப்பினருமான ஆமான் என்கின்ற நாசர்கான் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ரவி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் நசீர்அகமது உட்பட பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: