சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தைப்பூசத் திருநாளை ஒட்டி பள்ளப்பட்டி ராஜரிஷி ஆசிரமத்தில், தமிழ் கடவுளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழங்கு சுவாமி தரிசனம்.
தமிழ் கடவுள் ஆன முருகப்பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகள் உட்பட, குன்றிருக்கும் இடமெல்லாம் குவளையத்தூர் வழிபடட்டும் என்பதன் அடிப்படையில் அனைத்து முருக பெருமான் ஆலயங்களிலும் தைக்பூசத் திருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் பள்ளப்பட்டி ராஜரிஷி ஆசிரமத்தில் அமைந்துள்ள சேலம் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவிலில், தமிழ் கடவுள் ஆன முருகப் பெருமானுக்கு இன்று காலை முதலே விசேஷம் பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை பால்குட ஊர்வலத்துடன் தொடங்கிய தைப்பூச விழாவில் 8-அடி உயரம் கொண்ட விஸ்வரூப முருகப்பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் திருமஞ்சனம் உட்பட 16 வகையான மங்களப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதனை எடுத்து விஸ்வரூப முருகப்பெருமானுக்கு ராஜா அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு மகாதீப ஆராதனைகள் நடைபெற்றன. இந்த விழாவில் பள்ளப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் விண்ணை பிளக்கும் வகையில் முழக்கமிட்டு எம்பெருமானை வழிபட்டனர். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.
இதனை அடுத்து ஆகம விதிமுறை படி யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு மகாயாகவும் தைப்பூச விழாவையட்டி நடைபெற்றன. உச்சி கால பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றதை அடுத்து மாலை 7 மணி அளவில் புதிய தேரில் உற்சவர் பவனையும் நடைபெற்றன.
சேலம் பள்ளப்பட்டி ராஜரிஷி ஆசிரமம் தலைவர் ராஜரிஷி பாபு, நிர்வாகிகள் சுதன் வாசுகி வசியா சரவணன் மற்றும் விக்ரம் உள்ளிட்டோர் தைப்பூச விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
0 coment rios: