இந்த பயிற்சியானது ஏப்ரல் 2ம் தேதி முதல் மே மாதம் 10ம் தேதி வரை 30 நாட்கள் நடக்கிறது. எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். பயிற்சி, சீருடை உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். கிராமப் பகுதியைச் சேர்ந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பெண்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள், அவர்களது குடும்பத்தாரும் பயிற்சியில் சேரலாம். இதற்கான முன்பதிவு தற்போது நடக்கிறது.
விருப்பமுள்ளவர்கள் 0424 2400338, 8778323213, 7200650604 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 coment rios: