பழங்குடியினர் பட்டியலில் வரிசை எண்.25ல் மலையாளி இனமானது தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி சேர்க்கப்பட்டுள்ளது.
ஆனால், ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலையிலுள்ள சத்தியமங்கலம் தாலுக்கா மற்றும் பர்கூர் மலையிலுள்ள ஆகிய பகுதிகளில் வசிக்கும் மலையாளி இன மக்கள் பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் பெற இயலாத நிலை இருந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலையிலுள்ள சத்தியமங்கலம் தாலுக்கா மற்றும் பர்கூர் மலையிலுள்ள அந்தியூர் தாலுக்கா ஆகிய பகுதிகளை பழங்குடியினர் பட்டியலில் வரிசை எண்-25ல் மலையாளி இனத்தின் கீழ், சேர்த்திட மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாநில அரசின் சார்பாக நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மத்திய பழங்குடியினர் நல அமைச்சர் ஜூவல் ஓரம்-வை நேரில் சந்தித்து ஈரோடு மாவட்டத்தினை பழங்குடியினர் பட்டியலில் வரிசை எண்.25ல் மலையாளி இனத்தின் கீழ் சேர்த்து பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குநர் ச.அண்ணாதுரை, மலைவாழ் (எஸ்டி) மலையாளி மக்கள் நலச் சங்க பொறுப்பாளர்கள் சின்ராஜ், முருகன் மற்றும் இனத்தினைச் சார்ந்த பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
0 coment rios: