ஞாயிறு, 30 மார்ச், 2025

சேலம் எடப்பாடியில் விம்ஸ் மருத்துவமனையின் சார்பில், மாபெரும் இலவச இருதய, எலும்பு மகளிர் மற்றும் பொது மருத்துவ முகாம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் எடப்பாடியில் விம்ஸ் மருத்துவமனையின் சார்பில், மாபெரும் இலவச இருதய, எலும்பு மகளிர் மற்றும் பொது மருத்துவ முகாம்.

சேலத்தை எடுத்துள்ள வீம்ஸ் மருத்துவமனை மற்றும் எடப்பாடி எஸ் கே கிளினிக் ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் இலவச இருதய எலும்பு மகளிர் மற்றும் பொது மருத்துவ முகாம் எடப்பாடியில் உள்ள பழைய வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் நடைபெற்றது. சேலம் சீரகாபாடி விம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் மீனாட்சி சுந்தரம் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில், விம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இதயம் மருத்துவம், இதய அறுவை சிகிச்சை, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், இடுப்பு மூட்டு மாற்று மற்றும் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் சர்க்கரை புது மருத்துவம் தொடர்பாக இலவச ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும் உயரம், எடை, ரத்தஅழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, இசிஜி மற்றும் எக்கோ பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்பட்டன. அது மட்டும் இல்லாமல் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக அறுவை சிகிச்சைகள் செய்யப்படும் என்றும் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த மாபெரும் இலவச மருத்துவ முகாமில் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை 500-க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றுச் சென்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: