சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
காஷ்மீர் பகல்கம்
துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு SDCBA சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி.
காஷ்மிர் மாநிலம் பகல்கம் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயிலில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெ.மு. இமயவரம்பன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகன் மற்றும் பொருளாளர் கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த இந்த நிகழ்வில்,
தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களின் புகை படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி தலைவர் இமயவரம்பன் உட்பட நிர்வாகிகள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் SDCBA நிர்வாகிகள் உட்பட குற்றவியல் வழக்கறிஞர்கள் என திராளானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: