சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சமூகவிரோதிகளின் கூடாரமாக இருந்த சேலம் அல்லிகுட்டை ஏரி. 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுலாத்தலமாக மாற்றிய மாமன்ற உறுப்பினர் தெய்வாவிற்கு பொதுமக்கள் பாராட்டு....
சேலம் மாநகராட்சி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 2022 2023 ஆம் ஆண்டு கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்ட நிதியின் கீழ் தாதம்பட்டி அல்லிகுட்டை ஏரிக்கான சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு பணிகள் 10 கோடி ரூபாய் காண மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிருந்தா தேவி சேலம் மாநகர மேயர் இராமச்சந்திரன் சேலம் மாநகர துணை மேயர் சாரதா தேவி மாணிக்கம் மற்றும் 9-வது கோட்ட மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம் உட்பட அரசு துறை அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் என திரளானோர் கலந்து கொண்டு குத்து விளக்கினை ஏற்றி வைத்து நிகழ்வினை வரவேற்றனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான அதிகாரிகள் சீரமைக்கப்பட்ட அல்லிகுட்டை ஏரியினை பார்வையிட்டனர். அல்லிக்குட்டை ஏரி குறித்து மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் கூறுகையில், ஒரு கட்டத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்த இந்த அல்லிகுட்டை ஏறியினை சீரமைத்து கொடுக்க தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் முயற்சித்து 10 கோடி ரூபாய் நீதி பெற்று கொடுத்ததற்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக கூறியவர், இந்த பகுதியில் ஒரு சுற்றுலாத்தலமாக விளங்கும் வகையில் சீர்படுத்தப்பட்டுள்ள இந்த ஏரி பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாகவும், காலை மற்றும் மாலை நேரங்களில் மிகுந்த பாதுகாப்புடன் நடைபயிற்சி மேற்கொண்டு வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
0 coment rios: