புதன், 28 மே, 2025

சேலத்தில் உலக பட்டினி தினத்தில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்களின் பசியை போக்கிய த.வெ.க-வினர்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு

சேலத்தில் உலக பட்டினி தினத்தில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்களின் பசியை போக்கிய த.வெ.க-வினர்.

ஆண்டுதோறும் மே 28ஆம் தேதி உலக பட்டினி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஏழை எளியவர்களுக்கு தொண்டர்கள் ஒவ்வொருவரும் உதவிட வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அறிவுறுத்தலின் பேரிலும், கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின் பேரிலும் சேலம் அயோத்தியபட்டணம் தெற்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சாலையோரத்தில் வசிக்கும் ஏழை எளிய மற்றும் ஆதரவற்றவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சேலம் உடையாபட்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றி கழகத்தின் சேலம் அயோத்தியாபட்டணம் தெற்கு ஒன்றிய செயலாளர் வேதநாயகம் தலைமை வகித்தார். நிகழ்வில். நிர்வாகிகள் அமர்நாத் மற்றும் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாலையோரத்தில் வசிக்கும் ஏழை எளிய மற்றும் ஆதரவற்றவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்தனர். இதே போல மதியமும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,  அதனை தொந்தது இரவும் சேலம் அயோத்தியாபட்டணம் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய செயலாளர் வேதநாயகம்  தெரிவித்தார். இன்று மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக வெற்றி கழகத்தின் சேலம் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: