திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னியகவுண்டம்பாளையம் என்ற இடத்தில் காங்கேயத்தில் இருந்து கரடிவாவி நோக்கி கார் வந்து கொண்டிருந்தது.சின்னியகவுண்டம்பாளையத்தை சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவர் வெல்டிங் வேலை செய்து வரும் நிலையில் பணிக்கு செல்வதற்காக அவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.அப்போது எதிரே வந்த காரானது திடீரென கட்டுப்பாட்டை இழந்து முத்துமாணிக்கத்தின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் முத்துமாணிக்கம் விபத்துக்குள்ளாகி தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் முத்துமாணிக்கத்திற்கு கால் முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் முத்துமாணிக்கம் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விபத்து ஏற்படுத்திய கார் உரிமையாளர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இன்னும் பதிவு எண் கூட வாங்காத நிலையில் காரை ஓட்டி வந்ததும் காரின் உரிமையாளர் குறித்தும் இந்த விபத்து குறித்தும் பல்லடம் காவல்துறையினர் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
0 coment rios: