திருப்பூர் மாவட்டம் பல்லடம் மங்கலம் சாலையில் தபால் நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையில் பல்லடம் வட்டாரத்தில் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலம்,மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் தாங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப தனியார் பதிவு மையங்களுக்கு சென்று கூடுதலாக கட்டணத்தை செலுத்தி ரயில் டிக்கெட்டுகள் பதிவு செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக கூறி பல்லடம் தபால் நிலையத்திலேயே ரயில் டிக்கெட் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் இந்த தபால் நிலையத்தை புணரமைக்க வேண்டும் என்றும் பல்லடம் நகர பாஜக சார்பில் பல்லடம் தபால் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் நகரத் தலைவர் பன்னீர் செல்வகுமார் ,வித்யபிரகாஷ்,குரு பிரசாத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: