சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
சேலம் மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்கத்தின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அடையாள வேலை நிறுத்தம்.
சேலம் மாவட்ட JCB சங்கத்தின் கீழ் மாவட்ட முழுவதும் ஆயிரக்கணக்கான ஜே சி பி உரிமையாளர்கள் உறுப்பினர்களாக செயல்பட்டு வருகின்றனர். ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்த வாடகை தொகையை காட்டிலும் தற்பொழுது டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்களின் விலை உயர்வு, காப்பீட்டுத் தொகை மற்றும் சாலை வரி உயர்வு போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஒரு மணி நேரத்திற்கு 1300 ரூபாய் கூடுதலாக ஓட்டுநர் மற்றும் உதவியாளர்களுக்கு பேட்டா வழங்க வேண்டும் அதுபோக, குறைந்தபட்ச ஊதியமாக 3500 ரூபாய் வழங்கிட வேண்டும் என்பதனை வலியுறுத்தி சேலம் ஏற்காடு அடிவார பகுதியான கோரிமேடு பகுதியில் நூற்றுக்கணக்கான JCB வாகனங்களை நிறுத்தி தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
வாடிக்கையாளர்களுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான ஜே சி பி வாகனங்களை அங்கேயே நிறுத்தி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஜேசிபி உரிமையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: