சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் பள்ளிப்பட்டி கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா. பட்டியலின மக்கள் பங்கேற்க ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு. பட்டியலின சமுதாயத்தினர் சேர்ந்து விழா நடத்தவும் பாதுகாப்பு அளிக்கவும் ஊர் பொதுமக்கள் சார்பில் பட்டியலின விழா கமிட்டியினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு.
சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா கமிட்டினர் ராம்ஜி மற்றும் தர்மன் ஆகியோர் கோரிக்கை மனு வழங்குவதற்காக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சேலம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரை சந்தித்து வழங்கிய கோரிக்கை மனுவில், சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினம் பள்ளிப்பட்டி கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடி பொருள் உதவி செய்து கட்டப்பட்ட கோவில் மாரியம்மன் கோவில் அந்த மாரியம்மன் கோவில், இது நாள் வரை தாழ்த்தப்பட்ட மக்கள் சமமான முறையில் வந்து வழிபாட்டு உரிமையை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. அதன் காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தீண்டாம கொடுமையால் இந்த கட்டுமான பணி பாதியிலே நிறுத்தப்பட்டது. அந்த கட்டுமான பணியை 15 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து தரப்பு மக்களும் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் திருக்கோவில் புதுப்பிக்கப்பட்டது. மாரியம்மன் கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்று எப்பொழுதும் போல திருவிழா நடத்தலாம் என்பது அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடி அமைதி பேச்சு வார்த்தை நடத்தி தீர்மானித்தோம்.
இதனிடையே கட்டுமான பணிக்கு வீட்டிற்கு 5000 ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை வரி வசூல் செய்யப்பட்டது. வசூல் தொகையை கொண்டு கோவில் கட்டுமான பணி நிறைவடைந்துவிட்டது. இந்த நிலையில் திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னர், பால்குடம் முளைப்பாரி இது போன்ற நிகழ்ச்சி முறைகளில், கீழ் ஜாதி மக்கள் கீழே இருந்து வரணும், மேல் ஜாதி மக்கள் மேலிருந்து வரவேண்டும் என்கின்ற வகையில் தீண்டாமையை கடைபிடிக்கின்றனர் என்றும், இது தங்களுக்கு ஆரம்ப கட்டத்தில் அனைத்து தரப்பு மக்களை எந்த ஜாதிய முறைகளையும் கடைபிடிக்க கூடாது, ஜாதி குறியீடுகளும் வந்து கடைபிடிக்க கூடாது என்று கூறி பேச்சுவார்த்தை மூலமாக முடிவு செய்யப்பட்டது. தற்போதைய சூழலில் திருவிழா நடைபெறும் தருவாயில், தாழ்த்தப்பட்ட அல்லாத அனைத்து சமூக மக்களும் ஒன்று சேர்ந்து தாழ்த்தப்பட்டவர்கள் ஒரு இடத்திலிருந்தும் வரவேண்டும் என்பது தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அது சம்பந்தமாக நேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடி திருவிழாவை சுமுகமான சமத்துவமாக கொண்டாடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என மனு வழங்கி உள்ளதாகவும். இதேபோல காவல் நிலையத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளதோடு, ஒரு சமாதான கூட்டத்தை நடத்தி அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்றும், விழாக்காலம் இன்னும் பத்து தினத்திற்குள் நடைபெற இருக்கிறது.
அதனால் அனைத்து விசேஷங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த பகுதி மக்களுடைய கோரிக்கை. இந்த கோரிக்கைகளை ஏற்று அரசு தரப்பு ஒரு நல்ல முடிவு எடுத்து சம்பந்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பு அளித்து விழாவை சிறப்பை கொண்டாட வழிபாடு செய்யலாம் என்றும் பள்ளிப்பட்டியில் அரசு நிர்வாகத்துக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் பிள்ளையார் கோவில் சுப்பிரமணியர் கோவில் திரௌபதி அம்மன் கோவில் என நான்கு வகையான கோவில்களிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் சாதாரணமாக உள்ளே நுழைந்து வழிபாடு நடத்த முடியாத சூழல் தான் இன்றைய வரை இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் கோவில் கட்டப்பட்டு கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே இந்த ஜாதிய கொடுமைகளிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்களை மீட்டு அனைத்து கோவில்களையும் சமமான உரிமை வழிப்பாட்டு தலங்களை அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் தங்களுடைய பிரதான கோரிக்கை என்று மனுவில் குறிப்பிட்டிருந்தது.
0 coment rios: