சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மாநகராட்சி விழாவில் பேச வாய்ப்பளிக்காத மேயரை கண்டித்து பெண் துணை மேயர் விழா அரங்கில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு. துணை மேயராக பொறுப்பேற்றதில் இருந்து தன்னை தொடர்ச்சியாக புறக்கணிப்பதோடு மிரட்டல் விடுவதாகவும் மேயர் மீது பகிரங்க குற்றச்சாட்டு....
தமிழகம் முழுவதும் அரசு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து முடிவுகள் வெளியானது. அதன் அடிப்படையில் சேலம் மாநகராட்சியில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற 10-ம் வகுப்பு மாணவ மாணவிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்களை பாராட்டி பரிசளிக்கும் நிகழ்ச்சி சேலம் மாநகராட்சி நேரு கலை அரங்கில் நடைபெற்றது. சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி மாணிக்கம், மாநகராட்சி ஆணையாளர் உட்பட கல்வித்துறை அதிகாரிகள் பலரும் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் ஆகியோரை வாழ்த்தி மாநகர மேயர் உட்பட கல்வி துறை அதிகாரிகள் அனைவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில், சேலம் மாநகர துணை மேயர் சாரதாதேவி மாணிக்கம் அவர்களுக்கு பேச வாய்ப்பளிக்காமல் சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த துணை மேயர் சாரதாதேவி மாணிக்கம் மேயரின் செயல் குறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார். பின்னர் ஆணையாளர் பேச அனுமதித்தும் மேயர் ராமச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்து பேச விடாமல் தடுக்கும் நோக்கில் பள்ளி மாணவ மாணவிகளை பாராட்டும் வகையில் சான்றிதழ்களை வழங்க ஏற்பாடு செய்திருந்தது மாநகர துணை மேயர் சாரதாதேவி மாணிக்கம் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து சற்றும் யோசிக்காமல் சேலம் மாநகராட்சி அரசு விழாவிலிருந்து துணை மேயர் சாரதாதேவி மாணிக்கம் விழாவை புறக்கணித்து வெளியேறியது பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் இடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
இது குறித்து சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி மாணிக்கம் நம்மிடையே கூறுகையில், துணை மேராக தான் பொறுப்பேற்றதிலிருந்து மேயர் ராமச்சந்திரன் அவர்கள் கால்புணர்ச்சி காரணமாக தொடர்ச்சியாக தன்னை அவமதிப்பதும் அரசு விழாவிற்கு அழைப்பு விடுக்காமல் மறுப்பதும், தான் தகவல் அறிந்து செல்லும் பட்சத்தில் பொது மேடையிலேயே தன்னை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தும் நோக்கில் சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் அவர்கள் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டிய அவர், தான் நல்ல பெயர் எடுத்து விடுவேன் என்று கருதி தன்னை எல்லா வகையிலும் அவமதிப்பதோடு மட்டுமல்லாமல் பகிரங்கமாக மிரட்டல் விடுவதாகவும் தெரிவித்ததொடு, இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் செல்வ பெருந்தகை மற்றும் தங்கபாலு ஆகியோரின் தகவலுக்கு தெரிவித்துள்ளதாகவும், இதுபோக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் அவர்களிடமும் தெரிவித்துள்ளதாகவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய திருமதி சாரதாதேவி மாணிக்கம், தான் ஒரு பெண் வழக்கறிஞர் என்றும் பாராமல் இத்தகைய செயல்களில் ஈடுபடும் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மீது தமிழக முதலமைச்சர் உரிய விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நம்முடைய தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சேலம் மாநகராட்சி துணை மேயர் திருமதி சாரதாதேவி மாணிக்கம் அவர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து மேயர் ராமச்சந்திரனை நேரில் அணுகி கேட்டபோது, துணை மேயரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்று ஒரே வார்த்தையில் திட்டவட்டமாக தெரிவித்து சென்றார்.
சேலம் மாநகராட்சியில் நிலவு வரும் மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோருக்கு இடையேயான மணி போர் நீங்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பாரா ? பொறுத்திருந்து பார்ப்போம்.
0 coment rios: