சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் டெண்டர் முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் யாதவ மூர்த்தி மீது திமுக பெண் உறுப்பினர்கள் தாக்குதல்.
திமுக பெண் உறுப்பினர்களின் அநாகரிக செயலை கண்டித்து தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்.
சேலம் மாநகராட்சி மன்ற இயல்பு கூட்டம் இன்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பேசும்போது, மாநகராட்சியின் அவலங்களை ஒவ்வொன்றாக ஆதாரப்பூர்வமாக சுட்டி காட்டி பேசினார். தொடர்ந்து மாநகராட்சி டெண்டர் விடுவதில் முறைகேடு நடந்திருப்பதை சுட்டிக்காட்டியும், அமைச்சருக்கு வேண்டியவர்களுக்கு விதியை மீறி டெண்டர் வழங்கப்படுவதையும் குறித்து அவர் பேசினார். அப்போது மன்றத்தில் இருந்த திமுகவை சேர்ந்த 45-வது வார்டு பெண் கவுன்சிலர் சுகாசினி மற்றும் 35-வது வார்டு பெண் கவுன்சிலர் பச்சியம்மாள் ஆகியோரும் தங்களது இருக்கையில் இருந்து எழுந்து வந்து, யாதவமூர்த்தி மீது மிச்சர் பொட்டலத்தை வீசியும், அவரது கன்னத்தில் அறைந்தும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து அங்கு வந்த அதிமுக பெண் உறுப்பினர்கள் திமுக பெண் பெண் உறுப்பினர்களின் அநாகரிக செயலை கண்டித்து, அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனை அடுத்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மேயரிடம் புகார் அளிக்க அவரது இருக்கையை நோக்கி சென்றபோது மேயர் அதனை சற்றும் காது கொடுத்து கேட்காமல் மாமன்ற கூட்டம் முடிவடைந்ததாக கூறி இருக்கையில் இருந்து எழுந்து சென்றார். திமுக பெண் உறுப்பினர்களின் அநாகரிக செயலை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மேயரின் இருக்கை முன்பு அமர்ந்து தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாநகராட்சி அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் யாதவ மூர்த்தியும் அவரை தொடர்ந்து 25 வது வார்டு அதிமுக பெண் உறுப்பினர் சசிகலாவும் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது இதனை அடுத்து அவர்கள் இருவரும் கழக நிர்வாகிகளால் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மாமன்கிட்ட கூட்டத்தில்
அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அறிந்த கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் மாநகராட்சி அலுவலகத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஜனநாயகம் மீறப்பட்டுள்ளதாக தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநகராட்சி மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் மாநகராட்சியின் பிரச்சினையை குறித்து பேசுவது இயல்புதான் ஆனால் அந்த கேள்விக்கு மேயர் அல்லது ஆணையாளர் பதில் அளிப்பதற்கு பதிலாக திமுக பெண் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து தாக்கி உள்ளனர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று மாநகராட்சி அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி தெரிவித்தார்.
யார் அந்த தம்பி என்ற அதிமுகவினரின் கேள்விகள் தமிழகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில் சேலத்தில் அமைச்சருக்கு ஆதரவாளர் யார் அந்த காமராஜ் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அதைத்தான் இன்றைய மாநகராட்சி கூட்டத்தில் கேள்வியாக எழுப்பப்பட்டது. மாநகராட்சி கூட்டத்தில் ஏற்படும் பிரச்சனைகளை மன்றத்திற்குள் பேசி முடிப்பதற்கு பதிலாக காவல்துறை எப்படி உள்ள வந்தது என்று மாநகராட்சி அதிமுக கொரடா கே.சி.செல்வராஜ் கேள்வி எழுப்பினார்.
0 coment rios: