சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
17-அம்சம் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20 ஆம் தேதி நாடு தலைவிய அளவில் போராட்டம். சேலத்தில் நடைபெற்ற HMS கூட்டத்தில் முடிவு.
மதிய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மே மாதம் 20ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவது தொடர்பான ஹிந்த் மஸ்தூர் சபா தமிழ்நாடு மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்றது. ஹிந்த் மஸ்தூர் சபாவின் மாநில தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற இந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஹெச் எம் எஸ் செயல் தலைவர் சுப்பிரமணி பிள்ளை, மாநிலத் துணைத் தலைவர் கணேசன் மாநில செயலாளர் கோவிந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தன. கூட்டத்தில் ஹெச் எம் எஸ் மாநில பொதுச் செயலாளரும், தேசிய தலைவருமான ராஜா ஸ்ரீதர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் காஷ்மீர் மாநிலம் பகல்காம் பகுதியில் தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இந்திய சகோதர சகோதரிகளுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பது, இந்தியாவில் நடைபெறும் இது போன்ற தீவிரவாத சம்பவத்திற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் மற்றும் இந்தியாவில் தீவிரவாதத்தை பயன்படுத்தி மத வெறியை தூண்டும் மத்திய அரசு தவிர்க்க வேண்டும் என்பதோடு மோடி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இது குறித்து அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அகில இந்திய தலைவருமான ராஜா ஸ்ரீதர் கூறுகையில், தொடர்ச்சியாக தொழிலாளர்களின் விரோத போக்கை கடைப்பிடிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மே இருபதாம் தேதி நாடுதளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
நாடு தழுவிய போராட்டம் குறித்த இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: