சனி, 31 மே, 2025

தி புரோ ஆக்சன் ஸ்போர்ட்ஸ்-ன் சார்பில் நடந்தவாக்கத்தான், மாரத்தானில் 3600 பேர் பங்கேற்றனர்

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தி புரோ ஆக்சன் ஸ்போர்ட்ஸ்-ன் சார்பில் நடந்த
வாக்கத்தான், மாரத்தானில் 3600 பேர் பங்கேற்றனர்

சேலம் காந்தி ஸ்டேடியத்தில் ஜூன்-1ந் தேதி தி புரோ ஆக்சன் ஸ்போர்ட்ஸ் சார்பில் விளையாட்டு விழிப்புணர்வுக்காக முற்றிலும் பெண்கள் மட்டுமே பங்குபெறும் 3 கிமீ வாக்கத்தான் மற்றும் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளும் 5 கிமீ, 7 கிமீ மாரத்தான் நிகழ்வுகள் காலை 5 மணிக்கு நடைபெற்றது. தி புரோ ஆக்சன் ஸ்போர்ட்ஸ்: விழிப்புணர்வு வாக்கத்தான் மற்றும் மாரத்தான் நோக்கம் குறித்து தி புரோ ஆக்சன் ஸ்போர்ட்ஸ் நிர்வாகத்தினர் கூறியதாவது, விளையாட்டில் திறமைகள் இருந்தும் மு¬றான பயிற்சி மற்றும் போதிய பொருளாதார வசதியில்லாமல் பல வீரர்/வீராங்கணைகள் தங்களுடைய கனவுகளை சிறுவயதிலேயே தொலைத்து விடுகின்றனர். அவ்வாறான திறமைகளை அடையாளங்கண்டு அவர்களுக்கான பயிற்சி மற்றும் பொருளாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து அவ
ர்களை சாம்பியன்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதுதான் தி புரோ ஆக்சன் ஸ்போர்ட்ஸ் ஆகும்.  3 கிமீ பெண்களுக்கான வாக்கத்தான்: விளையாட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் முற்றிலும் பெண்கள் மட்டுமே பங்கு பெற்ற 3 கிமீ வாக்கத்தான்  சேலம் காந்தி ஸ்டேடியத்தில் ஆரம்பித்து, அரசுக் கலைக் கல்லூரி வழியாக வின்சென்ட் (நரசுஸ்) சிக்னல் வரை சென்று திரும்பவும் காந்தி ஸ்டேடியம் வந்து சேர்ந்தது. இதில் சேலம் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த 14 வயது முதல் 65 வயதிலான பெண்கள் மட்டும் 280 பேர் கலந்து கொண்டு தங்களுடைய ஆரோக்கியத்திற்காகவும், விளையாட்டு விழிப்புணர்வுக்காகவும் கலந்து கொண்டனர் இருபாலருக்கான மாரத்தான்: ஆண்&பெண் இருபாலரும் பங்கு பெற்ற 5 கிமீ மாரத்தானில் தி புரோ ஆக்சன் ஸ்போர்ட்ஸ் நிறுவனர் நாகராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். சேலம் காந்தி ஸ்டேடியத்தில் தொடங்கி அரசு கலைக் கல்லூரி வழியாக அஸ்தம்பட்டி ரவுண்டானா வரை சென்று திரும்பவும் காந்தி ஸ்டேடியத்தில் முடிந்தது. இதில் ஆண்,பெண் இருபாலரும் சுமார் 2500 பேர் தங்களுடைய ஆரோக்கியத்திற்காகவும், விளையாட்டுப் போட்டிகளை ஊக்கப்படுத்தியும் கலந்து கொண்டனர்.
இதே போன்று 7 கிமீ மாரத்தான் போட்டியை வழக்கறிஞர் சந்தியூர் இராசா.பார்த்திபன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். சேலம் காந்தி ஸ்டேடியத்தில் தொடங்கி அரசுக் கலை கல்லூரி, அஸ்தம்படி ரவுண்டான வழியாக சேலம் மத்திய சிறை வரை சென்று திரும்பவும் காந்தி ஸ்டேடியம் அடைவதாக நடைபெற்றது. இதில் ஆண் பெண் இருபாலரும் சேர்த்து 750 பேர் கலந்து கொண்டு தங்களுடைய ஆதரவை விளையாட்டிற்கும் விளையாட்டு போட்டிகளுக்கும் கொடுத்தனர். 
அனுமதி கட்டணம் ரூ.200 செலுத்தி வாக்கத்தான் மற்றும் மாரத்தானில் கலந்து கொண்ட அனைவருக்கும் டிசர்ட், ஆரோக்கிய உணவு, சான்றிதழ், மெடல் ஆகியவை வழங்கப்பட்டது. ஜனா ஸ்மால் பேங்க் மூலம் தண்ணீர் பாட்டில் நிகழ்ச்சி முழுவதும் வழங்கப்பட்டது..தி புரோ ஆக்சன் ஸ்போர்ட்ஸ் நிறுவனர் நாகராஜ் கூறும் போது, ஒவ்வொரு விளையாட்டிலும் சிறந்த விளையாட்டு வீரர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் பொருளாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து அவர்களை சாம்பியன்களாகவும், நமது மாவட்டத்தை விளையாட்டு சாம்பியன்கள் நிறைந்த மாவட்டமாகவும் மாற்றிடவும் வரும் காலத்தில் லிட்டில் ஒலிம்பிக் உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட தி புரோ ஆக்சன் ஸ்போர்ட்ஸ் இன்று முதல் பல்வேறு விளையாட்டு போட்டிகளையும் நடத்தவிருக்கிறது. இதன் முதல் படியாக இன்று நடைபெற்ற வாக்கத்தான் மற்றும் மாரத்தானில் கலந்து கொண்ட அனைவருக்கும், இந்த நிகழ்வை நடத்த உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். தி புரோ ஆக்சன் ஸ்போர்ட்ஸ்&ன் அடுத்து வருகிற போட்டிகள் மற்றும் அதன் தகவல்கள் தங்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படும். அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாடுகளை தி புரோ ஆக்சன் ஸ்போர்ட்ஸ்&ன் மேலாளர் கார்த்திக் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
நிகழ்வில் கோ&ஸ்பான்ஸர் மற்றும் பார்ட்னராக இணைந்த அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஹெல்த்-பார்ட்னர்: மக்களின் ஆரோக்கியம் மற்றும் கலந்து கொள்ளும் அனைவரின் நலன் காக்கவும் சேலம் 3 ரோட்டில் அமைந்துள்ள நியூரோ ஃபவுண்டேசன் மருத்துவமனை ஹெல்த்&பார்ட்னராக தி புரோ ஆக்சன் ஸ்போர்ஸ் உடன் இணைந்து முறையே வாக்கத்தான் மற்றும் மாரத்தானில் பங்கேற்றவர்களுக்கு தேவையான முதலுதவி மற்றும் அவசர சிகிச்சையினை மேற்கொண்டனர். கோ-ஸ்பான்சர்ஸ்: இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது என்பது இன்றைய பொருளாதார உலகில் மிகப் பெரிய சிக்கலை உருவாக்கும் அவ்வகையில் சமூக நலன் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தி புரோ ஆக்சனின் வாக்கத்தான் மற்றும் மாரத்தான் நிகழ்வுக்கு பயோவஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், பிட்கொய்வா ஆகியோர் கோ&ஸ்பான்சராக நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்தனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: