திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அறிவொளிநகர் மற்றும் குருவாயூரப்பன் நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மங்கலம் சாலையிலிருந்து அப்பகுதிகளுக்கு செல்லும் சாலையானது வாய்க்கால் அருகே அமைந்துள்ளது. மேலும் அவ்வழியே பெரிய பள்ளம் ஒன்று உருவாகியுள்ளதால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றன. மேலும் உயிர் இழப்பு ஏற்படும் அபாயமும் இருப்பதாக அப்பகுதியினர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர் இருப்பினும் இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்றும் உயிரிழப்பு ஏற்படும் முன் பள்ளத்தை சீர் செய்து தர வேண்டும் கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீர் பல்லடம் மங்கலம் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு வந்த பல்லடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலந்து சென்றனர். இதனால் பல்லடம் மங்கலம் சாலையில் கடும் போக்குவரத்து நெர்சல் ஏற்பட்டது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவ்வழியே டைல்ஸ் லோடு ஏற்றிச்சென்ற லாரி ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது இதில் டைல்ஸ் முற்றிலும் சேதம் அடைந்தது அதேபோல் இரவு நேரத்தில் அவ்வழியே சென்ற வாகனம் ஒன்று அந்த பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
.
0 coment rios: