S.K. சுரேஷ்பாபு.
கல்வித் தந்தையின் 123 வது பிறந்தநாளில், தேசிய மக்கள் கட்சியின் சேலம் மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், கல்வி தந்தையுமான கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா இன்று அனைத்து தரப்பினராலும் நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் கமலா ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜரின் திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு தேசிய மக்கள் கட்சியின் சார்பில் கல்வி தந்தைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது அந்த கட்சியின் மாநில செயலாளர் ராம்ஜி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாநில தலைவர் ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருவரும் ஒரு சேர்ந்தவாறு கர்மவீரரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனை அடுத்து அதே பகுதியில் தமிழ்நாடு தேசிய மக்கள் கட்சியின் சேலம் மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழாவும் நடைபெற்றது. சேலம் மாவட்ட தலைமை அலுவலகத்தினை அந்த கட்சியின் மாநிலத் தலைவர் சீனிவாசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து கட்சியில் பணிகளையும் செயல்பாடுகளையும் துவக்கி வைத்தார். மேலும் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் கட்சி நிர்வாகிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் கிழக்கு மாவட்ட தலைவர் தர்மன் விவசாய அணி மாவட்ட தலைவர் ராமன் விவசாய அணியின் மாவட்ட பொதுச் செயலாளர்கள் விக்னேஷ் செல்வராஜ் சித்தேஸ்வரன் சரவணன் உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: