ஈரோட்டில் நாவலடியான் பியூல்ஸ் நிறுவனத்தின் சார்பில் புதிய பெட்ரோல் பங்குகள் உதயமானது...
ஈரோடு ஆனைக்கல் பாளையம் பாளையம் ரிங் ரோட்டில் இன்று நாவலடியான் பியூல்ஸ் நிறுவனத்தின் சார்பில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களின் புதிய பெட்ரோல் பங்குகள் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ ஆர் ஈஸ்வரன் எம் எல் ஏ, தமிழ்நாடு வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ பிரகாஷ், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்று பெட்ரோல் பங்குகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்,
இவ்விழாவில் ஈரோடு மாநகராட்சி மேயர் எஸ் நாகரத்தினம், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.கே சரஸ்வதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் எஸ் சூரியமூர்த்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொருளாளர் கே.கே.சி பாலு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பிரபாகரன், அஇஅதிமுக எம் ஜி ஆர் மன்ற இளைஞர் அணி இணைச் செயலாளர் வி.பி சிவசுப்பிரமணியம், எம்.எஸ்.கே தங்கராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்,
நவலடியான் பியூல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் நவலடியான் ஆர்.வேலுச்சாமி, வி.பொன் விக்னேஷ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
மேலும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் சி எஸ் சதீஷ்குமார் டி.டி சுரேஷ் சந்திரசேகர் தேஷ்முக், குமார் கவுரவ், பிரதீப் குமார் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் நிர்வாகிகள் பங்கஜ் மீனா, ஆர் ஷங்கர், வருண் யாதவ், ஜீவன் அவினாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
0 coment rios: