சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் ஆத்தூர் புத்தரகவுண்டன் பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான முத்து மலை முருகன் கோவிலில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனம்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திர கவுண்டன் பாளையத்தில் உலகிலேயே அதிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மன எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்திற்காக சென்றார். அப்பொழுது வழியல் முத்துமலை முருகன் கோவிலில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் பூரண கும்ப மரியாதை அளித்து கோவிலில் தீபாராதனை பெற்று சுவாமி தரிசனம் செய்தார். அப்பொழுது அவருக்கு வெள்ளி வால் வழங்கப்பட்டது. வால் கையில் ஏந்தி கோவிலில் வலம் வந்து 146 அடி உயரம் கொண்ட முருகன் சுவாமியின் மேலே சென்று வேலுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து வழிபாடு செய்த அவர், மீண்டும் தனது பயணத்தை விழுப்புரத்திற்கு தொடங்கினார். அதிமுக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
0 coment rios: