சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா.
சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக கல்லூரியின் ஸ்ரீ வள்ளியப்பா கலையரங்க கூடத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக நடைபெற்ற இந்த விழாவிற்கு கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார். கல்லூரியின் துணைத் தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா மற்றும் தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் முனைவர் காதர் நவாஸ் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வரவேற்று பேசினார்.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த ராம் குமார் சேசு எழுத்தாளர் பெற்றோர் மாணவர்களிடையே சிறப்புரை நிகழ்த்தினார். பள்ளி காலத்தில் இருந்து கல்லூரி வாழ்க்கைக்கு அடி எடுத்து வைக்கும் சிறப்பினையும், மாணவர்கள் எவ்வாறு தங்களது திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் குறித்து பேசினார். கல்லூரியின் தலைவர் திரு .சி.வள்ளியப்பா அவர்கள் பேசும் பொழுது மாணவர்கள் கல்லூரி பருவத்தை நன்முறையில் அமைந்து கொண்டு பெற்றோர்களை பேணி பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
மேலும் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மாநிலக் கல்வி பிரிவில் பயின்று 550 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கும், மத்திய கல்வியில் (சிபிஎஸ்சி) பயின்று 450க்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் வீதம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் நிறைவாக கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் முனைவர். எஸ். மோகனப்பிரியா அவர்கள் நன்றி உரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சோனா நிறுவனங்களின் இயக்குனர் டாக்டர்.கார்த்திகேயன், முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொண்டு பெருமை சேர்த்தனர்.
0 coment rios: