சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
கோட்டை அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் திருத்தேர் வெள்ளோட்டம். ஏராளமான மக்கள் சக்தி கோசமிட்டு வடம் பிடித்து இழுத்தனர்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். எட்டு பட்டிகளுக்கு காவல் தெய்வமாக விளங்கும் சேலம் கோட்டை பெரியமாரி திருவிழாவானது 22 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் உற்சவ அம்மன் திருவீதி உலா கொண்டு செல்ல தேர் இல்லாதது பக்தர்களிடையே வருத்தம் இருந்தது. திருக்கோவிலில் தேரோட்டம் நடத்த பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 32 அடி நீளம், 16 அடி அகலம் கொண்டு ஆறு சக்கரங்களுடன் திருத்தேர் செய்யும் பணி தொடங்கப்பட்டது. ஆடி திருவிழா தொடங்குவதற்கு ஒரு மாத காலமே உள்ள நிலையில் திருத் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், வெள்ளோட்டம் நடத்த அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு எடுத்து இன்று பல்வேறு நதிகளில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் வேள்விகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து இன்று சிறப்பு கேள்வி நடந்தது இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பால் இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தி வண்ண மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. அர்ச்சனைகள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வேள்வியில் பூஜை செய்த கலச நீர் ஆனது தேரில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியம் இசைக்க தேருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்ட பின்னர் திருத்தேர் வெள்ளோட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சக்தி கோஷங்கள் விண்ணை பிளக்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு கோலாட்டம் மாணவிகளின் பரதநாட்டியம் மற்றும் சிவன் பார்வதி முருகன் விநாயகர் வேடம் தரித்து நடனம் ஆடினர். இந்த தேரானது முதல் அக்கரகாரம் தேர்வீதி இரண்டாவது அக்ரஹாரம் பட்டை கோவில் சின்ன கடைவீதி கன்னிகா பரமேஸ்வரி கோவில் வழியாக மீண்டும் திருக்கோவிலை வந்தடைந்தது. தேரை இழுக்கும்போது பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என கோஷங்களை எழுப்பி தேரை இழுத்தது பரவசத்தை ஏற்படுத்தியது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி மாணிக்கம் மற்றும் சேலம் ஸ்ரீ கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவில் அறங்காவலர் சக்திவேல் மற்றும் செயல் அலுவலர் உட்பட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: