சேலம்.
S.K. சுரேஷ்பாபு
திமுக அயலக அணியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் சேலம் நேரு கலையரங்களில் நடைபெற்றது.
திமுக அயலக அணியின் மாநில செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கழக துணை பொது செயலாளர் திருச்சி சிவா மற்றும் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன், அயலக அணி மாநில தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம் மாநிலத் துணைச் செயலாளர்ரும் சேலம் அஸ்தம்பட்டி மண்டலகுழு தலைவருமான திருமதி உமாராணி உள்ளிட்டோ கலந்து கொண்டு அயலக அணி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரன் பேசும் போது,.
பாஜகவிற்கு தூதி பாடும் அதிமுகவிற்கு பதில் கொடுக்கும் பணியை முழுமையாக செய்து கொண்டு இருக்கும் திருச்சி சிவாவிற்கு உறுதுணையாக இருந்து வரும் 2026 ஆம் ஆண்டு மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஆட்சி அமைய அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிட வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில் திமுக துணை பொது செயலாளர் திருச்சி சிவா பேசும் போது, பெயருக்கு பின்னால் ஜாதி பெயரையும், மதத்தின் பெயரையும் போடாமல் படிப்புகளை போடும் நிலையை உருவாக்கியது திராவிட ஆட்சிகள் தான், இந்த தேர்தல் போர் தத்துவ போராக உள்ளது என்றும், ஒன்றிய அரசு மாநிலத்தின் உரிமையை பறிக்கிறது, மொழியை நசுக்குகிறது இதனை தடுக்க வேண்டும் என்று பேசினார்.
இந்த தேர்தலில் அனைவரும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள இருளை நீக்கும் தீ குச்சிகளாக இருக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று கூறிய அவர் கழக தலைவர் கூறும் செயல்களை செய்யும் தீ குச்சியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
திமுகவில் உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், இந்த தேர்தலில் அயலக அணியினரின் பங்கு என்ன என்பதை புரிந்து செயல்படுங்கள் என்றும் குறிப்பாக ஒவ்வொரு வாக்குசாவடிகளில் உள்ள வாக்களர்களில் 30 சதவிகித சேர்த்திட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கூறியதை நிறைவேற்றும் வகையில் இந்த ஆட்சியின் சாதனைகளை, திட்டங்களை எடுத்துரைத்து செல்லும் கழக குழுவினருடன் சென்று, வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு என்ன உதவியாக இருந்தாலும் திமுக உதவும் என்று நம்பிக்கையை கொடுங்கள் என்று கூறினார். வெளிநாட்டில் உள்ள தமிழர்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உருவாக்கி உள்ளார் என்றும் குறிப்பாக உக்ரேன் போரின் போது அங்குள்ள தமிழ்நாட்டின் மாணவர்களை தமிழகத்திற்கு அழைத்து வர தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகளை எடுத்துரைத்த அவர், அவரவர் தங்கள் பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் கழக நிர்வாகிகளும் திமுக வெற்றி பெற உழைக்க வேண்டும் என்றும் உறுப்பினர்களை சேர்க்கும் பட்டாளத்தில் சிப்பாய்களாக சேர்த்து பணியாற்றிட வேண்டும் என்றும் அதற்கான உறுதியை ஏற்க வேண்டும் என்றும் நமது எதிர்பவர்கள் பலமானவர்கள் அல்ல ஆனால் மிகவும் மோசமனவர்கள் என்பதை நினைவில் கொண்டு பணியாற்றிட வேண்டும் என்றார்.
0 coment rios: