சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
திமுகவையும் பாஜகவையும் தனது எதிரி என குறிப்பிடும் விஜய், அதிமுகவை மட்டும் தனது எதிரி என்று சொல்லாதது ஏன்? என ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான், திமுக அரசை எந்த மாநிலத்தோடும் ஒப்பிட முடியாது சர்வதேச நாடுகளுடன்தான் ஒப்பிட முடியும்; ஏனெனில் திமுக அரசின் ஆட்சி அந்த அளவிற்கு உள்ளது. எனவே 2026ல் மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்றார். மேலும், 11 தேர்தல்களில் தோல்வியை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, தற்போது 12 ஆவது தோல்வியை சந்திக்க நாளை துவக்கமாவதாவும், முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை துவங்குவதால் வெற்றி பெற்றுவிடலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி தப்பு கணக்கு போடுவதாகவும் தெரிவித்த அவர் எடப்பாடி பழனிச்சாமியின் குடுமி அமித்சாவின் கையில் உள்ளது என்றார்.
திமுகவையும் பாஜகவையும் தனது எதிரி என குறிப்பிடும் விஜய், அதிமுகவை மட்டும் தனது எதிரி என்று சொல்லாதது ஏன் ? என்று கேள்வி எழுப்பிய அவர், எம்ஜிஆரை போன்று வெற்றி பெற்று விடலாம் என விஜய் கனவு காண்கிறார்; எம்ஜிஆர் நடிகராக இருந்தபோது திமுகவில் பொருளாளராக இருந்து கட்சி பணியாற்றினார். ஆனால் பனையூரை விட்டு வெளியே வராத விஜயை எம்ஜிஆர் - உடன் ஒப்பிட கூடாது என்றார்.
0 coment rios: