சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
சேலத்தில் பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்திய 15-வது மாபெரும் சிறப்பு இலவச மருத்துவ முகாம்.
சேலம் மண்டல சர்வதேச உரிமைகள் கழகம், இளம்பிள்ளை ஸ்ரீ காவியா கன்ஸ்ட்ரக்ஷன், சுவாசம் அறக்கட்டளை மற்றும் விநாயகா மிஷன் கிருபானந்த வாரியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய 15 வது மாபெரும் சிறப்பு இலவச மருத்துவ முகாம் சேலம் அன்னதானபட்டி பகுதியில் நடைபெற்றது. சேலம் மண்டல சர்வதேச உரிமைகள் கழகத்தின் அமைப்புச் செயலாளர் தேவராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவாசம் அறக்கட்டளை மாநில ஒருங்கிணைப்பாளர் கௌதம் பாஸ்கரன் மற்றும் சேலமண்டலம் மனித உரிமைகள் கழகத்தின் நிர்வாக இயக்குனர் அய்யனார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு முகாமில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவர் அசோகன் 56வது கோட்டை மாமன்ற உறுப்பினர் சரவணன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு முகாம்மீனை துவக்கி வைத்தனர். இந்த சிறப்பு முகாமில் காது மூக்கு தொண்டை மருத்துவம் தோல் சிகிச்சை பிளாஸ்டிக் சர்ஜரி கழுத்து வலி தோள்பட்டை வலி மூட்டு வலி இடுப்பு வலி, முதுகு தண்டுபடும் வழி குழந்தைகள் நலம் மற்றும் கண் மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிறந்த ஆலோசனையும் வழங்கப்பட்டன. இந்த சிறப்பு முகாமில்பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றுச் சென்றனர். இந்த சிறப்பு முகாமில் சர்வதேச மனித உரிமைகள் கழக மாநில மகளிர் அணி இணை செயலாளர் அம்முலதா உட்பட நிர்வாகிகள் சித்துராஜ் சித்தேஸ்வரன் மணிவண்ணன் கணேசன், பீம ராஜன் சண்முகசுந்தரம் முருகன் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 coment rios: