விசைத்தறி தொழிலாளர்கள் கிட்னியை விற்கும் அவல நிலையை போக்க "மஞ்சள் பை" உற்பத்தி திட்டத்தை விசைத்தறிகள் மூலம் செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள் ..!
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் வேலுச்சாமி செய்தி குறிப்பில் ...
தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்த படியாக,
இன்னும் சொல்லப்போனால், விவசாயத்துக்கு ஈடாக வேலைவாய்ப்பு வழங்கி வருவது நெசவுத் தொழில், இந்த நெசவுத் தொழிலில், விசைத்தறிகள் வாயிலாக, 20 லட்சத்துக்கு மேற்பட்ட நெசவாளர்களுக்கு நேரடியாகவும் 10 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்,
ஒரு நெசவாளிக்கு குடும்ப உறுப்பினர்கள் நான்கு முதல் ஐந்து என்று கணக்கிட்டால் தமிழகத்தின் ஆறு கோடி மக்கள் தொகையிள்
ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகைக்கு நேரடியாகவும் 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகைக்கு மறைமுகமாகவும் வாழ்வாதாரம் வழங்கி வரும் இந்த விசைத்தறி தொழில்,
கொரோனா காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரை அழிவின் பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாலும், உலக பொருளாதாரத்தின் மந்த நிலை காரணங்களாலும், நாடா இல்லா நவீனமயமாக்கப்பட்ட தறிகளின் மூலம், குறைந்த நபர்களை வைத்து, அதிக உற்பத்தியை மேற்கொள்வதனால், ஏற்படும் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம், விசைத்தறி தொழிலை செய்பவர்களுக்கு ஏற்படும் தொழில் நஷ்டம், உள்ளிட்ட காரணங்களால், விசைத்தறிகளை பழைய இரும்புக்கு உடைத்து விற்கும் அவல சூழ்நிலைக்கு இந்த இரண்டு வருட காலமாக தள்ளப்பட்டு இருப்பதாலும்,
விசைத்தறி உரிமையாளர்களுக்கு உரிய லாபமும் கிடைக்காமல், நஷ்டம் அடைவதாலும், விசைத்தறி தொழிலாளர்களுக்கு, முழு வேலை வாய்ப்பு கிடைக்காமல், ஊதிய இழப்பு ஏற்படுவதால் குடும்பம் நடத்த கூட இயலாமல், குடும்பச் சுமையை சரி செய்வதற்காக, வாங்கிய கடன்களை அடைப்பதற்காக, உடம்பின் மிக முக்கிய உறுப்பாக கருதப்படும் கிட்னியை விற்கும் அவலம், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் நடந்திருப்பது, விசைத்தறி தொழில் எந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்து இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.
இதன் தாக்கம் மேலும் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால், விசைத்தறியாளர்களுக்கு, விசைத்தறி நெசவாளர்களுக்கு முழு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்ய வேண்டிய கடமை, மத்திய மாநில அரசுகளுக்கு உண்டு என்பதை உணர்ந்து, போர்க்கால அடிப்படையில், இந்த குற்றங்கள் மேலும் நடக்காமல் இருப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன்,
விசைத்தறி தொழிலை மேம்படுத்துவதற்காகவும், விசைத்தறிகளுக்கான தனி ரக ஒதுக்கீடு சட்டம், அரசு துறையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்குமான சீருடைகளை, விசைத்தறிகளும் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள், சுற்றுச்சூழலை காப்பதற்கு மஞ்சள் பைத்திட்டம், விசைத்தறிக்கூடங்களுக்கு தேவைப்படும் மின் உற்பத்தியை, விசைத்தறிக்கூடங்களிலே, உற்பத்தி செய்வதற்கான நெட் மீட்டர் வசதியுடன் கூடிய, சோலார் பேனர்களை நிறுவுவதற்கு, 50 சதவீத மானியமும், மீதமுள்ள 50 சதவீதத்திற்கு, குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குவது, காட்டன் நூல்களுக்கு விதிக்கப்படும் 5% ஜிஎஸ்டி வரி போன்று செயற்கை நூல் இலை ரயானுக்கும் 5% விதிப்பது, போன்ற திட்டங்களை வகுத்து, விசைத்தறிகளையும், விசைத்தறி தொழிலை நம்பி இருக்கும், ஒரு கோடி 50 லட்சத்துக்கு மேற்பட்ட, தமிழ்நாட்டு மக்கள் தொகைக்கு, வாழ்வாதாரத்துக்கு வழி வகுக்க வேண்டும் என்று, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக, மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுகிறோம் என்றார்.
0 coment rios: