ஈரோடு மாவட்டம், கோபி அருகே சாலை விபத்தில் சிக்கி தவித்த இளைஞரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த எஸ்டிபிஐ கட்சியினர்..!
ஈரோடு - சத்தியமங்கலம் செல்லும் சாலையில் வெள்ளாளபாளையம் பிரிவு அருகே நேற்று மாலை ( 20.07.2025 ) இருசக்கர வாகனத்தில் வந்த கார்த்திக். வயது 27 என்ற இளைஞர் தீடீர் விபத்து ஏற்பட்டு சுயநினைவின்றி மயக்க நிலையில் இருந்துள்ளார்,
இந்நிலையில், அந்த வழியாக வந்த கோபி தொகுதி செயலாளர் s. சர்ஜித் ரகுமான், நகர செயலாளர் M.கோபி யாசின், நகர செயற்குழு உறுப்பினர்
M.முகம்மது யாசர் ஆகிய எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள், அந்த இளைஞரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்து உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டனர்,
விபத்தில் சிக்கிய கார்த்திக்-கின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததுடன், கோபிசெட்டிபாளையம் காவல்துறையினரின் முன்னிலையில் விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தையும் ஒப்படைத்துள்ளதாக எஸ்.டி.பி கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்,
மனிதநேயத்துடன் உயிர் காக்கும் இந்த உதவியை செய்த எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.
0 coment rios: