சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
பாட்டாளி மக்கள் கட்சியின் 37 ஆம் ஆண்டு தொடக்க விழா. மூவர்ண கொடியினை ஏற்றி வைத்து கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்கிறது பாமக சட்டமன்ற உறுப்பினர்.
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 36 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 37 ஆம் ஆண்டு தொடக்க விழா. இந்த நிகழ்வை தமிழகம் முழுவதும் உள்ள பாமகவினர் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர மாவட்ட பாமக அலுவலகத்தில் மூவர்ண கொடியினை ஏற்றி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தார் சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள். இதனை அடுத்து, பாட்டாளி சொந்தங்களுக்கு மருத்துவர் ஐயா அவர்களின் என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே அன்பு மடல் ஒரு லட்சம் பிரதிகளை சேலம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக எம்.பி சதாசிவம் அவர்கள் வெளியிட சிவதாபுரம் PV. மகாதேவன் (PV மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர்) மாவட்ட துணை செயலாளர் பெற்றுக்கொண்டார்.
ஆகஸ்ட் 10ஆம் தேதி பூம்புகாரில் நடைபெறும் மகளிர் மாநாடு குறித்து மாநகர மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் கதிர்.இராஜரத்தினம், மாநில தேர்தல் பணிக்குழுத்தலைவர் MP சதாசிவம்,மாவட்டதலைவர், கோவிந்தன், மாவட்ட அமைப்பு செயலாளர் சேகர், மாவடட்ட துனை செயலாளர் ராஜமாணிக்கம், பகுதி செயலாளர் சின்னசாமி, பகுதி தலைவர் பூபதி, மாவட்ட மகளிரணி தங்கம், கிருஷ்ணாம்பாள்,மாநில உழவர் பேரியக்க தலைவர் செந்தில், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0 coment rios: