புதன், 23 ஜூலை, 2025

மேட்டூர் நகராட்சியில் 80 அடி சாலையில் உள்ள ஆக்கிரமப்புகளை அகற்ற தவறும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி தலைமை செயலகம் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர் மக்கள் மையம் எச்சரிக்கை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

மேட்டூர் நகராட்சியில் 80 அடி சாலையில் உள்ள ஆக்கிரமப்புகளை அகற்ற தவறும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி தலைமை செயலகம் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர் மக்கள் மையம் எச்சரிக்கை. 

சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சி முல்லை நகர் மற்றும் ஜீவா நகர் பகுதிகளில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் வாசித்து வருகின்றனர். அரசு வழிகாட்டுதலின்படி இங்குள்ள 80 அடி சாலை கடந்த 50 வருட காலமாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், தற்போது பண பலம் மற்றும் அரசியல் பலம் கொண்ட பத்துக்கும் மேற்பட்ட பிரமுகர்களால் சம்பந்தப்பட்ட இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அந்த இடத்தில் வணிக வளாகங்கள் கட்டி தனிநபர் வருமானம் செய்து வருகின்றனர். மேலும் அங்குள்ள காலியிடங்களில் கம்பி வேலிகள் அமைத்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் ஆக்கிரமிப்பாளர்கள். இது சம்பந்தமாக முல்லை நகர் மற்றும் ஜீவா நகர் பகுதி மக்கள் வலக்கட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை அரசு துறை அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கோட்டை மைதானத்தில் சம்பந்தப்பட்ட பகுதி மக்களால் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அம்பேத்கர் மக்கள் மையத்தின் நிறுவன தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உரிமையாளர்கள் சங்க தலைவர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்த ஆர்ப்பாட்டத்தில், இந்த ஆக்கிரமிப்பு குறித்து குடியிருப்பு வாசிகளான அசோக்குமார் தியாகராஜன் பார்த்திபன் மற்றும் அன்புநாதன் ஆகியோர் தொடர்ந்து வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி அரசு நடவடிக்கை மேற்கொண்டு அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி அரசு நிலத்தை அரசே பாதுகாக்குமாறு மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் சார் ஆட்சியர் மனு மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி பல்வேறு கோஷங்களை எழுப்பிய அவர்கள், தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இந்த பிரச்சனையில் தலையிட்டு ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து சம்பந்தப்பட்ட இடத்தை மீட்க தவறும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சங்கத்தின் துணைத் தலைவர் மார்ட்டின் ஜோசப் அம்பேத்கர் மக்கள் மையம் மகளிர் அணி மாநில செயலாளர் பூங்கொடி மேட்டூர் நகர செயலாளர் சண்முகம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சங்கத்தின் செயலாளர் பார்த்திபன் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: