சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மக்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம். சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு.
தமிழக அரசின் சார்பில் மகளிர் நலன் உட்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதனை முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசின் திட்டங்கள் தொடர்பாக விண்ணப்பித்த அனைவரும் பயன் பெற்று வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் தமிழக அரசின் சட்ட திட்டங்களில் விடுபட்டவர்களை இணைக்கும் விதமாகவும் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாகவும் மக்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் கடந்த 15 ஆம் தேதி இந்த திட்டம் தமிழக முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் ஊரகப்பகுதியில் மட்டுமே நடைபெற்று வந்த தமிழக அரசின் இந்த திட்டமான மக்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் தற்பொழுது சேலம் மாநகர பகுதியில் இன்று தொடங்கியது. சேலம் அம்மாபேட்டை பகுதியில் நடைபெற்ற இந்த முகாம் துவக்க விழாவிற்கு சேலம் அம்மாபேட்டை மண்டல குழு தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் திருமதி பிருந்தா தேவி முன்னிலை வகித்த இந்த சிறப்பு முகாமில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரும் சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சில மத்திய மாவட்ட திமுக செயலாளருமான வழக்கறிஞர் இராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழக அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற வகையில் துரை ரீதியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பொதுமக்களுக்கான தேவைகள் கோரிக்கைகளாக பெறப்பட்டன. முகாமினை ஆய்வு செய்து சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன் பெறப்படும் அணுக்கள் அனைத்திற்கும் விரைவில் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் அனைவரும் பயன் பெறுவீர்கள் என்ற நம்பிக்கையை ஊட்டியது அங்கு கூடியிருந்த மக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றது.
0 coment rios: