சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
மணலாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக முழுவதும் மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தின் சார்பாக தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அந்த சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் கண்ணையன் சந்திரன், செல்வம் மாரியப்பன் மற்றும் ராஜாமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அந்த சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் பழனிச்சாமி கலந்துகொண்டு மணல் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை உரையாற்றினார். அப்போது, சேலம் மாவட்டத்தில் கட்டுமான தொழிலை பாதுகாக்க நொரம்பு கிராவல், செம்மண், மண்பானை மண், கருங்கல் உள்ளிட்டவைகளுக்கு உடனடியாக பர்மிட் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சேலம் மத்திய மாவட்ட ஜே சி பி உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ஜேசிபி உரிமையாளர்கள் சங்கத்தினர் செங்கல் சூளை உரிமையாளர்கள் கட்டுமான பொருள் விற்பனையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: