சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளை மற்றும் அன்பின் கரங்கள் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளையின் சார்பில் தமிழக முதல்வர் அவர்களுக்கு பாராட்டு விழா.
மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் வழங்கிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா, ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளை, அன்பின் கரங்கள் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை ஐந்தாம் ஆண்டு துவக்க விழா மற்றும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் ஆகியவை சேலம் கோட்டை பகுதியில் நடைபெற்றது. அன்பின் கரங்கள் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளையின் நிர்வாக அலுவலர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவினை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் சேலம் மாநகர மேயர் இராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்து விழாவை சிறப்பித்தனர். ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளையின் தலைவர் கர்லின் எபி, மற்றும் சேலம் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் அத்தி அண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகுத்தனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி பிரதநிதித்துவம் அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சிறந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கி விழாவில் கௌரவிக்கப்பட்டனர். இந்த விழாவில் மாபெரும் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றன இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தார் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மேடம் ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளை நிர்வாகத்தின் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சியும் அழிக்கப்பட்டன. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்களும் விழாவின் போது வழங்கப்பட்டது. இதனை அடுத்து மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் விழாவில் இடம் பெற்றன. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளை நிர்வாகம் மற்றும் அன்பின் கரங்கள் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

0 coment rios: