சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
சேலத்தில் காங்கிரஸ் சிறுபான்மை மற்றும் மனித உரிமை துறை சார்பில் இலவச பல் மருத்துவ முகாம். ஏராளமான பொதுமக்கள் பயன்.
சேலம் மாநகர் மாவட்ட சிறுபான்மையினர் துறை மற்றும் மனித உரிமை துறை ஆகியவற்றின் சார்பில் மாபெரும் இலவச பல் மருத்துவ முகாம் சேலம் சூரமங்கலம் பகுதியில் நடைபெற்றது. முகாமிற்கு சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் அலாவுதீன் பாஷா தலைமை தாங்கினார். தொடர்ந்து நடைபெற்ற இலவச பல் மருத்துவ முகாமில், அகில இந்திய தேசிய காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாவட்ட தலைவர் இர்ஃபான், மாவட்டத் துணைத் தலைவர் அம்ஜத் கான் மற்றும் மாவட்ட பொருளாளர் கன்னங்குறிச்சி தமிழ்செல்வன் மற்றும் மாவட்ட துணை செயலாளர் இம்தியாஸ் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தனர். இந்த முகாமில் பல் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு பல் சம்பந்தமான அனைத்து விதமான வியாதிகளுக்கும் இலவசமாக சிகிச்சைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர். இந்த முகாமில் சூரமங்கலம் ஜங்ஷன் பழைய சூரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்று சென்றனர்.

0 coment rios: