சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மல்லூரில் ஊரணியில் தமிழ்நாடு. அமைச்சர்கள் முன்னிலையில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 2000 த்திற்கும் அதிகமானோர் திமுகவில் இணைவு.
தமிழக சட்டப்பேரவையில் பதவி காலம் வரும் 2026 ஆம் ஆண்டு முதல் நிறைவு பெற உள்ளது. இதனை அடுத்து தற்பொழுதே தமிழகத்தில் அரசியல் களும் கடும் சூடு பிடித்துள்ளது என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மண் மொழி மானம் காக்க தமிழகத்தை தலைகுனிய விட மாட்டேன் ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் தீவிர உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் சேலம் மாவட்டம் உட்பட தமிழக முழுவதும் தொடர்ச்சியாக நடைபெற்ற வண்ணமே உள்ளன. அந்த வகையில் சேலம் கிழக்கு மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட பனமரத்துப்பட்டி ஒன்றியம் மல்லூர் பேரூராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் மாற்று கட்சியில் இருந்து விலகிய இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணையம் நிகழ்ச்சி மல்லூரில் நடைபெற்றது.
மல்லூர் பேரூராட்சி தலைவர் வேங்கை அய்யனார் ஏற்பாடு மற்றும் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் செல்வகணபதி, கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார், உமாசங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த நிகழ்வில், தமிழக அமைச்சர்கள் வழக்கறிஞர் இராஜேந்திரன் மற்றும் எ.வா வேலு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாற்று கட்சிகளில் இருந்து விலகி தங்களை புதிதாக திமுகவில் இணைத்து கொண்ட புதிய உறுப்பினர்களுக்கு கட்சி துண்டுகளை அணிவித்து வாழ்த்து கூறி வரவேற்றனர்.
மேலும் கட்சியில் இணைந்த புதிய உறுப்பினர்கள் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்ன செய்ய வேண்டும் அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இந்த நிகழ்வில் புதிதாக கலந்து கொண்ட உறுப்பினர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதிமுகவை பொருத்தவரை திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு தலைப்பில் மாநகரம் உட்பட மூன்று மாவட்டங்களிலும் நாள்தோறும் பல்வேறு இடங்களில் அதிகப்படியான உறுப்பினர்கள் திமுகவில் இணைந்து வருவது அதிமுகவின் கோட்டை என சேலத்தை கூறிவரும் எடப்பாடி அறக்கும் அதிமுகவினருக்கும் இடையே மிகப் பெரிய கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.
0 coment rios: