சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
உலக இதய தினத்தையொட்டி சேலம் விம்ஸ் மருத்துவமனையில் ஹீலிங் சர்க்கிள் மற்றும் சிறப்பு சலுகை அட்டை வெளியீட்டு விழா நடைபெற்றது.
ஆண்டுதோறும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சேலத்தை அடுத்துள்ள அரியனுர் விம்ஸ் மருத்துவமனையில் உலக இதய தினத்தை ஒட்டி ஹீலிங் சர்க்கிள் மீட் மற்றும் சிறப்பு சலுகையுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் விழா மருத்துவமனை கலையரங்கில் நடைபெற்றது. மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவினை சேலம் மாநகர காவல் துறை துணை ஆணையர் கேல்கர் சுப்பிரமணிய பாலச்சந்திரா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கான சிறப்பு சலுகை அட்டையை வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் பேசிய விம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மீனாட்சிசுந்தரம், மாறிவரும் வாழ்க்கை முறை உணவு முறைகள் மன அழுத்தும் உள்ளிட்ட காரணங்களினால் இதய நோய் ஏற்படுவதாக கூறிய அவர், இதற்கு உணவு கட்டுப்பாடு உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சி மிக முக்கியமானது என்றும் வருடத்திற்கு ஒரு ரத்தப் பரிசோதனை மற்றும் இருதய பரிசோதனை மேற்கொண்டு அதற்கான சிகிச்சை முறைகளை உரிய முறையில் மேற்கொண்டால் இதய நோயிலிருந்து விடுபடலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும் மது புகையிலை பொருட்களை புறக்கணித்து, சர்க்கரை ரத்த கொதிப்பு ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய டாக்டர் மீனாட்சி சுந்தரம், இல்லையெனில் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும் இதயம் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை உலகம் முழுவதும் மிக அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளும் பொதுமக்கள் இடையே ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்ததோடு உறுப்புகளை தானம் செய்ய ஒருபோதும் யோசிக்க கூடாது என்றும் இதன் காரணமாக பல உயிர்கள் காப்பாற்ற முடியும் என்றும் தெரிவித்தார். மிகச் சிறந்த மருத்துவ குழுவினர் தங்களது மருத்துவமனையில் உள்ளதால் இந்த விழாவை மிகச் சிறப்பாக செய்து முடித்ததாக பெருமையுடன் குறிப்பிட்ட மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மீனாட்சி சுந்தரம் இதயமாற்று மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உட்பட தங்களது மருத்துவமனையில் அனைத்து விதமான நோய்களுக்கும் சிறந்த முறையில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்த விழாவில் மருத்துவமனையின் பொது மேலாளர் வெங்கடேசன் உட்பட அனைத்து வித நோய்களுக்கான சிறப்பு மருத்துவர்கள் செவிலியர்கள் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: