செவ்வாய், 30 செப்டம்பர், 2025

சேலம் மாவட்டம மல்லூர் அருகே அரசு கரட்டு புறம்போக்கில் அனுமதி இன்றி மணல் கொள்ளை. அந்த பகுதி இளைஞர்களின் எதிர்ப்பை எடுத்து இரவோடு இரவாக தப்பிச்சென்ற மணல் கொள்ளையர்கள்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மாவட்டம மல்லூர் அருகே அரசு கரட்டு புறம்போக்கில் அனுமதி இன்றி மணல் கொள்ளை. அந்த பகுதி இளைஞர்களின் எதிர்ப்பை எடுத்து இரவோடு இரவாக தப்பிச்சென்ற மணல் கொள்ளையர்கள். 

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ளது வாழ குட்டப்பட்டி பஞ்சாயத்து. இங்குள்ள எரும நாயகன் பட்டி மலையடிவாரத்தில் பொம்மநாயகன் என்பவரது பிரசாத் என்பவருக்கு  சொந்தமான பட்டா நிலத்தில் மணல் அள்ளுவதாக  அண்ணாமலை பட்டியைச் சார்ந்த அய்யனார் என்பவரது மகன் ஏவிஎம் தினேஷ் என்பவர் அனுமதி பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. மூன்று அடி அளவிற்கு மணல் அல்ல அனுமதி பெற்று இருந்த தினேஷ் என்பவர் அந்த பட்டா நிலத்தில் மணல் எடுப்பதை மட்டுமல்லாமல் அருகில் இருந்த கரடு புறம்போக்கில் ஏராளமான நிலப்பரப்பில் சுமார் ஏழு அடிக்கும் கீழாக மணலை கடத்தி சட்ட விரோத செயலில் ஈடுபட்டுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் இரவு பகலாக சட்டவிரோதமாக மணல் கடத்திய ஏவிஎம் ஏவிஎம் தினேஷ் என்பவர் கடத்தப்பட்ட மணலுடன் லாரிகள் குறுகலான குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மிக அதிக வேகமாக நாள்தோறும் சென்றதை கண்ட அந்த பகுதியை சேர்ந்த பத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இந்த மணல் கொள்ளை குறித்து தினேஷ் என்பவரை முற்றுகையிட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளனர். 
மேலும் இந்த மணல் கடத்தல் சம்பவத்திற்கு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரும் உடந்தை என குற்றம் சாட்டிய அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், இந்த மணல்  கடத்தல் சம்பவம் குறித்து தினேஷிடம் கேட்டபோது உரிய அனுமதி பெற்று தான் இந்த மணலை இங்கிருந்து அள்ளுவதாக கூறியதோடு மட்டுமல்லாமல் இது தொடர்பாக எங்கு வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. மணலை அழும் போது அங்கிருந்த பாறைகளையும் வெடிவைத்து தகர்த்தி பாறைகளையும் கடத்தியதாக குற்றம் சாடிய கிராமத்து இளைஞர்கள் தற்பொழுது எங்கே தற்பொழுது இங்கு ஏற்பட்டுள்ள பள்ளத்தின் காரணமாக மழை காலத்தில் மழை நீர் தேங்கி இங்கு குலம் போல தண்ணீர் தேங்கும்போது இந்த பகுதியில் விளையாடு வரும் குழந்தைகளின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது என்று கேள்வி எழுப்பியதோடு இந்த கரட்டில் வசிக்கும் வன விலங்குகளின் உயிருக்கும் பாதுகாப்பில்லாத சூழல் உருவாகி உள்ளதால் சம்பந்தப்பட்ட ஏவிஎம் தினேஷ் என்பவர் மீது சேலம் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உரிய விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை  எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். தகவல் அறிந்து வந்த கிராம இளைஞர்களின் போராட்டத்தை எடுத்து இரவோடு இரவாக மணல் கடத்தலில் ஈடுபட்ட ஏ வி எம் தினேஷ் மற்றும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளுடன் அங்கிருந்து தலைமையில் வாங்கியுள்ளனர்.மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏ வி எம் தினேஷ் என்பவர் இங்கு மட்டும் தான் மணலை சட்டவிரோதமாக அள்ளியுள்ளாரா அல்லது இதற்கு  முன்பு வேறு இடங்களில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கையையும் முன் வைத்துள்ளனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: