சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 42.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டப் பணிகள்.
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யம் பெருமாம்பட்டி பகுதியில் சமுதாய கூடத்தில் மேற்புறம் உணவு கூடம் கட்டுவதற்காக பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 18.60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டன. இதே போல சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் சமுதாய கூடத்தின் மேற்பகுதியில் உணவு கூடம் மற்றும் சமையல் கூடம் கட்டுவதற்காக 18.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான பணிகளும் பூமி பூஜை செய்யப்பட்டு துவக்கி வைக்கப்பட்டது. இதே போல சிவதாபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மயானத்திற்கு 6.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட எரிவாயு தகடு மேடையும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் பாமக மாவட்ட செயலாளர் கதிர்ராசனத்திலும் மற்றும் மாவட்டத் தலைவர் கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 coment rios: