சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ஆதித்தமிழர் பேரவை சார்பில் உள் இட ஒதுக்கீடு உரிமை நாள் ஆர்ப்பாட்டம். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு.
உள் இட ஒதுக்கீடு உரிமை போராளி நீலவேந்தன் வீரவணக்க நாளில் சேலம் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்திய ஆர்பாட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. ஆதித்தமிழர் பேரவையின் சேலம் மாவட்ட செயலாளர் ஏ டி ஆர் சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் சையது மூசா, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர் தங்கராசு, மனிதநேய மக்கள் கட்சியில் மாவட்ட தலைவர் ஷேக் முகமது, தமிழக வாழ்வுரிமை கட்சியின் வடக்கு தொகுதி பொறுப்பாளர் அமிர்தராஜ் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய இந்த ஆர்ப்பாட்டத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு பட்டியல் சமூக இட ஒதுக்கீட்டை அமுல்படுத்திட வலியுறுத்தி பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் கல்யாணி தினேஷ் மாணிக்கம் அருள்குமார் கிருஷ்ணா யுவராஜ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

0 coment rios: