சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழகத்தில் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு அதிகரித்துள்ளதாக கூறியுள்ள பால்வளத்துறை அமைச்சர், பால் கொள்முதல் விலை அதிகரிப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாதது ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி வேதனை.
தமிழக விவசாயிகளுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கடந்த 22ஆம் தேதி ஆவின் பால் பண்ணையை முற்றுகையிட்டு கறவை மாடுகளுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனலையில்
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு 1.68 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் இன்று செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார் என்றும் அறிவிப்பு ஒரு பக்கம் மகிழ்ச்சிகரமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் பால் உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு தற்போது வழங்கி வரும் பால் கொள்முதல் விலை கட்டுப்படியான விலையாக இல்லாததால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு நினைவுபடுத்துவதாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே அறிவித்தபடி, தங்களின் அத்தியாவசிய கோரிக்கையான பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காத பட்சத்தில் அக்டோபர் 22ஆம் தேதி தமிழக முழுவதும் பால் உற்பத்தி நிறுத்த போராட்டம் மேற்கொள்வதோடு ஒவ்வொரு தனியார் பால் பண்ணையையும் முடக்கமும் தயங்க மாட்டோம் என்றும் இந்த சூழலில் தமிழகத்தில் பால் பற்றாக்குறையை போக்குவதற்காக மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரும் பாலை தமிழக எல்லையிலேயே ஆங்காங்கே தடுத்து நிறுத்தி தங்களை எதிர்ப்பை வெளிப்படுத்த தயங்க மாட்டோம் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கையை பதிவு செய்துள்ளார் வேலுச்சாமி.

0 coment rios: