சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மிலாது நபி விழா நிறைவு. 3 டன் தப்புருக் வழங்கி மகிழ்ந்த இஸ்லாமியர்கள்.
இறைத்தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மிலாது நபி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நிறைவு விழா சேலம் கோட்டை மேல் தெரு பள்ளிவாசலில் நடைபெற்றது. சேலம் கோட்டை மேல் தெரு இஸ்லாமிய நற்பணி மன்றத்தின் சார்பில் 3 டன் அளவிற்கு குஸ்கா சமைத்து ஏழை எளியவர்களுக்கு தப்புருக் வழங்கப்பட்டது. முன்னதாக மேல் தெரு பள்ளிவாசலில் சிறப்பு தொழுகைகள் நிறைவு பெற்றதை அடுத்து பள்ளிவாசலின் முத்தவல்லி அமான் என்கின்ற நாசர் கான் தலைமையில் நடைபெற்ற தப்ரூக் வழங்கும் நிகழ்ச்சியில், இஸ்லாமிய நற்பணி மன்ற நிர்வாகிகள் அஹ்மத் கான்,பண்டு, எஸ்.ஜி. பாஷா, தாஜுதீன், கோட்டை நூர் மற்றும் அஜித் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஏழை எளிய இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து மத மக்கள் என சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வழங்கி மகிழ்ந்தனர்.
0 coment rios: