சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பாழடைந்த கட்டிடத்தை இடித்து அகற்றிடுக. மாநகராட்சி நிர்வாகம் மற்றும் இயல்பு கூட்டத்தில் பேசியும் பலன் இல்லை. மாமன்ற உறுப்பினர் ஜெ.மு. இமயவரம்பன் வேதனை.
60 கோட்டங்களை உள்ளடக்கியது சேலம் மாநகராட்சி. இதில் 44வது கோட்டத்தின் மாமன்ற உறுப்பினராக இருப்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த ஜெ.மு. இமயவரம்பன். தேர்தல் காலகட்டத்தில் தான் அறிவித்த வாக்குறுதிகள் மட்டுமல்லாமல் அறிவிக்காத வாக்குறுதிகளையும் செயல்படுத்தி 44வது கோட்ட மக்களிடம் நன்மதிப்பை பெற்ற இமயவரம்பன், சேலம் மாநகராட்சி 44 வது கோட்டம் கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவில் பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள பாழடைந்த கட்டிடத்தை உடனடியாக அப்புறப்படுத்தி பொதுமக்களின் உயிரை காப்பாற்றிட வேண்டும் என்று ஒரு மாதத்திற்கு முன்பே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
மேலும் வட்டாட்சியரிடமும், அம்மாபேட்டை மாநகராட்சி உதவி ஆனையாளரிடமும் புகார் கொடுத்தும் இது வரை நடவடிக்கை இல்லை என என வேதனைப்படுகிறார் மாமன்ற உறுப்பினர் இமயவரம்பன். இதனிடையே கடந்த 25-9-25 ம் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பியும் இது வரை நடவடிக்கை இல்லை என குறிப்பிட்டுள்ள அவர் அப்பகுதி பறையர் இன மக்கள் வாழும் பகுதி என்றும் இந்த கட்டிடம் இடிந்து விழுந்து பொதுமக்களுக்கு உயிர் சேதாரம் ஏற்படும் முன்பு காப்பாற்றிட வேண்டுகிறேன் என்ற கோரிக்கையினையும் அவசர மற்றும் அவசியமாக வலியுறுத்தி உள்ளார்.
சேலம் ஜான்சன் பேட்டையை சேர்ந்த செந்தில் என்பவர், அம்மாபேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் இவருக்கு சொந்தமான இந்த வீட்டினை இடிக்காமல் இடிந்து விழும் நிலையில் உள்ள தருவாயில் அப்படியே விற்பனை செய்வதற்காக வேண்டுமெனறு கடந்த பல வருடங்களுக்கு மேலாக இழுத்தடித்து வருவதாக அந்தப் பகுதியினரின் ஒட்டுமொத்த குற்றச்சாட்டாகவே உள்ளது. அவர் காவலர் என்பதால் அரசு துறை அதிகாரிகளை நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்து வருவதாகவும் ஆதங்கப்படுகின்றனர் அந்த பகுதியினர்.
0 coment rios: