சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
44வது கோட்ட மாமன்ற உறுப்பினரின் தீவிர முயற்சிக்கு கிடைத்த வெற்றி. அபாயகரமான நிலையில் உள்ள வீட்டினை சொந்த செலவில் அப்புறப்படுத்த 15 நாள் கெடு.
சேலம் மாநகராட்சியின் 44 வது கோட்டத்திற்கு உட்பட்டது கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெரு. இங்கு சேலம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவருக்கு சொந்தமான சுமார் 800 சதுர அடி பரப்பளவிலான மூன்று அடுக்குகளை கொண்ட கட்டிடம் பாலடைந்து எந்த நேரத்திலும் விழுந்து விடும் சூழலில் இருப்பதால் இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட 44 வது கோட்ட மாமன்ற உறுப்பினர் இமயவர்மன் அவர்களால் சேலம் அம்மாபேட்டை மண்டல அலுவலகத்திலும் சேலம் மாநகராட்சி இயல்பு கோட்டத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சேலம் மாநகராட்சியின் நகரமைப்பு பிரிவு வாயிலாக சம்பந்தப்பட்ட குடியிருப்பு உரிமையாளருக்கு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த நோட்டீஸில் 44 வது கோட்டத்திற்கு உட்பட்ட கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெரு பகுதியில் உள்ள பாலடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தினை நேரடி ஆய்வு செய்தபோது அபாயகரமான நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற பதினைந்து நாட்களுக்கு உள்ளாக சம்பந்தப்பட்ட கட்டிடத்தினை வீட்டின் உரிமையாளர் தாங்களாகவே தங்களது சொந்த செலவில் முழுமையாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்த நோட்டீஸில் தவறும் பட்சத்தில் ஆணையர் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இந்த கட்டிடத்தை இடிக்கும் தருவாயில் எந்த விதமான அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலும் அதற்கு மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பல்ல என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதோடு தங்களது நன்றியினை 44 வது கோட்ட மாமன்ற உறுப்பினர் இமயவரம்பன் அவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
0 coment rios: