சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் சாஸ்தா நகர் ஐயப்ப ஆசிரமத்தில் வித்யாரம்பம். நெல்மணிகளில் அ ன்னா, ஆ வன்னா எழுதி பழகிய பெற்றோர்கள்.
கல்வித்தாய் சரஸ்வதி தேவியை போற்றும் விதமாக ஆண்டு தோறும் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளிச் செல்லவிருக்கும் குழந்தைகள் இந்த நன்னாளில் தாய் மொழியை எழுதி பழகினால் பிற்காலத்தில் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம். இதற்காக விஜயதசமி விழா சேலம் குரங்கு சாவடி சாஸ்தா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்ப ஆசிரமத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதுக்காக ஆசிரமத்தின் அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்பாட்டில் திருக்கோவிலின் வசந்த மண்டபத்தில் ஸ்ரீ ஐயப்பன் திருவுருவப்படம் மற்றும் ஸ்ரீ சரஸ்வதி தேவியின் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது சிறப்பு பூஜைகள் ஆசிரமத்தின் நம்பூதிரிகளால் மேற்கொள்ளப்பட்டன. இதனை அடுத்து நடைபெற்ற வித்யா ஆரம்பம் நிகழ்ச்சியில் சேலம் மாநகர மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான பெற்றோர்கள் பள்ளி செல்லவிருக்கும் தங்களது குழந்தைகளை திருக்கோவிலுக்கு அழைத்து வந்து நெல்மணி மற்றும் அரிசிகளில் அவரவர் தாய்மொழிகளில் முதல் எழுத்துக்களை எழுத வைத்தும், ஆசிரம நம்பூதிகளின் கைகளால் குழந்தைகளின் நாவில் தாய் மொழியின் முதல் எழுத்துக்களை எழுதி, நம்பூதிரிகள் வேத மந்திரங்கள் முழங்க கல்வி அறிவினை புகட்டி மகிழ்ந்தனர்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் திருக்கோவில் அறக்கட்டளையின் சார்பில் பிரசாதங்களும் அன்னதானமும் வழங்கப்பட்டன. வித்யா ஆரம்பம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சாஸ்தா நகர் ஸ்ரீ ஐயப்ப ஆசிரம அறக்கட்டளை நிர்வாகிகள் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.
0 coment rios: