சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் 44வது கோட்டத்தில் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடம். SMC காலனிக்கு கலைஞர் நகர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த அமைச்சர்.
60 கோட்டங்களை உள்ளடக்கியது சேலம் மாநகராட்சி. இதில் 44-வது கோட்டம் என்பது தனித்துவமாக விளங்கி வருகிறது என்பது நிதர்சனம். காரணம்...... 44 வது கோட்டத்தின் மாமன்ற உறுப்பினரும் குற்றவியல் வழக்கறிஞருமான ஜெ.மு. இமயவரம்பன், தான் பதவியேற்ற காலத்தில் இருந்து தற்பொழுது வரை சுமார் 44 கோடி ரூபாய் அளவிற்கு திட்டப் பணிகளை மேற்கொண்டார் என்பது இதற்கு காரணம். நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டியது, இரண்டு பாலடைந்த கிணறுகளை தூர்வாரியது மற்றும் அந்தப் பகுதியில் கரும்புள்ளியாக இருந்த குப்பைமேடு சீர்மிகு சுற்றுலாத்தலமாக மாற்றியது என்பன போன்ற பல்வேறு திட்ட பணிகள் இதில் அடங்கும்.
அந்த வகையில் சேலம் மாநகராட்சியின் 44-வது கோட்டத்திற்கு உட்பட்ட கிச்சிபாளையம் பகுதியில் சுமார் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய நூலகத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான இமயவரம்பன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சேலம் மாநகர மேயர் இராமச்சந்திரன், ஆணையாளர் டாக்டர் இளங்கோவன், அம்மாபேட்டை மண்டல குழு தலைவர் தனசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நூலகத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றியும் அற்பணித்தார்.
விழாவில் கலந்துகொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும் போது 44வது கோட்ட மாமன்ற உறுப்பினர் இமயவரம்பன் மேற்கொண்டு தீவிர முயற்சியின் காரணமாக 44 வது கோட்டத்திற்கு உட்பட்ட தேசிய புனரமைப்பு காலனி என்று அழைக்கப்படும் எஸ் எம் சி காலனியை கலைஞர் நகர் என்று பெயர் மாற்றப்பட வேண்டும் என்று பல வருடங்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் சேலம் மாமன்ற கூட்டத்தில் தேசிய புனரமைப்பு காலனியை கலைஞர் நகர் என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து தமிழக அரசு கெஜட்டில் இது குறித்த தகவல் வெளியானதை அடுத்து விழாவில் கலந்து கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன் தேசிய புனரமைப்பு காலனியை கலைஞர் நகர் என்று பெயர் சூட்டில் மகிழ்வதில் மகிழ்ச்சி அடைவதாக பெருமையுடன் குறிப்பிட்டார். அப்பொழுது குடியிருந்த மாமன்ற உறுப்பினர் உட்பட அனைவரும் தங்களது கரகோஷங்களை எழுப்பி தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
விழாவில் பேசிய ஜெ. மு. இமயவரம்பன் எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடித்து விட்டால் 60 கோட்டங்களை உள்ளடக்கிய சேலம் மாநகராட்சியில் 44-வது கோட்டம் மட்டும் தன்னிறைவு பெற்ற கோட்டமாக விளங்கும் என்று பெருமைப்படவும் தெரிவித்தார்
இதனை அடுத்து மாமன்ற உறுப்பினர் இமயவரம்பன் முயற்சியின் பேரில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 44வது கோட்டத்தில் பணியாற்றும் துப்புரவு தூய்மை காவலர்களுக்கு புத்தாடைகளையும் அமைச்சரின் வாயிலாக வழங்கி மகிழ்கிறார். இந்த நிகழ்வில் அரசு துறை அதிகாரிகள் ஒருதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0 coment rios: