சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பள்ளிப்பட்டி ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளுக்கும் வார்டு வாரியாக பெயர்களை சூட்ட வேண்டும். பள்ளிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றி பொதுமக்களின் பார்வைக்கு வைக்க தமிழ்நாடு தேசிய மக்கள் கட்சி கோரிக்கை.
காந்தி பிறந்தநாளை ஒட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டி ஊராட்சியிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அங்குள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு பள்ளிப்பட்டி ஊராட்சியின் கிளர்க் சோபியா தலைமை வகித்தார். அயோத்தியாபட்டணம் ஒன்றிய அலுவலக அதிகாரிகள் மற்றும் வீராணம் காவல் துறையினர் முன்னிலை வகித்த இந்த கிராம சபை கூட்டத்தில் பள்ளிப்பட்டி ஊராட்சியில் உள்ள ஒன்பது வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட தற்பொழுது வரை தீர்க்கப்படாமல் உள்ள பல்வேறு பிரச்சனைகளை குறித்து கோரிக்கை மனுக்களாக வழங்கினர்.
இந்த கூட்டத்தில் தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ராம்ஜி தலைமையிலான நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பள்ளிப்பட்டி ஊராட்சியில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசியதோடு, தமிழகத்தில் உள்ள குடியிருப்புகள் தெருக்களின் பெயர்கள், சாலைகள் மற்றும் நீர் நிலைகளில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில் ஜாதிப் பெயர்கள் இருந்தால் நீக்க வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டதாகவும், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை சுட்டிக்காட்டி சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டி ஊராட்சியில் உள்ள ஒன்பது வார்டுகளில் இரண்டுக்கும் மேற்பட்ட வார்டுகளில் ஜாதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அதாவது ஆதிதிராவிடர் ஏடி காலனி, அண்ணா நகர் உடையார் தெரு என்பன போன்ற ஜாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதனை மாற்றி இங்குள்ள ஒன்பது வார்டுகளிலும் வார்டு வாரியாக பெயர்களை சூட்டி அதனை கிராம சபை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றி பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை மனு தேசிய மக்கள் கட்சியின் மாநில செயலாளர் ராம்ஜி வழங்கினார்.
இது குறித்து அவர் நம்மிடையே கூறுகையில், ஜாதிகளின் பெயர்களை நீக்கிவிட்டு தலைவர்களின் பெயர்களை வைக்க அதிகாரிகள் யூகித்து வருவதாகவும் ஒருவேளை தலைவர்களின் பெயர்களை சூட்டினால் பிற்காலத்தில் ஜாதிகளின் பெயர்கள் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறியதோடு, இங்குள்ள ஒன்பது வார்டுகளிலும் வார்டுகள் வாரியாக பெயர்களை சூட்ட வேண்டும் என்பது மட்டுமே தமிழ்நாடு தேசிய மக்கள் கட்சியின் கோரிக்கையாக உள்ளது என்று தெரிவித்தார். அப்போது கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
0 coment rios: