சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்திட வலியுறுத்தியும், போதை ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்ற கோரியும், கிராம சபை கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு.
காந்தி பிறந்தநாளை ஒட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உடையாபட்டி ஊராட்சி அலுவலகத்திலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் உடையாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தற்பொழுது வரை தீர்க்கப்படாமல் உள்ள பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் குறித்து தீர்த்து வைக்க கோரிக்கையாக மனுக்களை வழங்கினர்.
அந்த வகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பசுமை நாயகர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் கட்டளைப்படியும், தலைமை ஒருங்கிணைப்பாளர் கார்த்தி EX MLA, மாநில மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் கீர்த்திரதன் அவர்கள் வழிகாட்டுதல்படியும்,
தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்தநாளில் அயோத்தியபட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உடையாபட்டி கிராம சபை கூட்டத்தில், தமிழ்நாட்டில்
பூரண மதுவிலக்கு அமல்படுத்திடவும், போதை ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவர் சங்க மாநிலத் தலைவர் வழக்கறிஞர் விஜயராசா தலைமையில் மனு வழங்கினர்.
நிகழ்ச்சியில் சட்டக் கல்லூரி மாநிலத் துணைத் தலைவர் ஹரி சுதன், முன்னால் ஒன்றிய செயலாளர் நாகராஜன் ,சேலம் மாவட்ட சட்டக் கல்லூரி பிரிவு அமைப்பாளர் பாலகிஷோர், மற்றும் மேற்கண்ட தீர்மானத்திற்கு ஆதரவாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றிய துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குமார் மற்றும் திரளான பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
0 coment rios: