திங்கள், 13 அக்டோபர், 2025

சட்டவிரோத மோசடி பத்திரப்பதிவை ரத்து செய்திடுக. சார் பதிவாளர் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் மீது பத்திரப்பதிவு சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சட்டவிரோத மோசடி பத்திரப்பதிவை ரத்து செய்திடுக. சார் பதிவாளர் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் மீது பத்திரப்பதிவு சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு. 

சேலம் சின்ன கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் கணேசன் சுகந்தி தம்பதியினர். சுகந்தி என்பவர், மோசடி பத்திரப்பதிவு குறித்து புகார் மனு அளிப்பதற்காக தனது வழக்கறிஞர் பூமொழி என்பவருடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார். அந்த மனுவில் தனது கணவரான கணேசனின் தந்தை தாச கவுண்டர் என்பவருக்கு நில உடமை பதிவு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பட்டா தொடர்பாக எந்தவிதமான ஆவணங்களும் ஏற்படுத்திக் கொள்ளாமல் கடந்த 23 வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். தாச கவுண்டர் என்பவருக்கு தனது கணவர் உட்பட ஏழு வாரிசுகள் இருப்பதாகவும் தற்பொழுது வரை தாச கவுண்டர் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் பெறப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தாச கவுண்டர் என்பவருக்கு சொந்தமான பட்டாவில் வாரிசு மற்றும் பிறப்பு சான்றிதழ் இன்றி சம்பந்தப்பட்ட சொத்தை அவரது வாரிசுகளான ஆனந்தாயி முத்துசாமி முத்துப்பிள்ளை கோவிந்தம்மாள் மற்றும் கணேசன் ஆகியோர் மறைத்து பொய் வாக்குறுதிகளை அளித்து சட்டவிரோதமாக நாராயணன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரின் பெயர்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது இதற்கு சம்பந்தப்பட்ட வருவாய்த் துறையினரும் உடந்தையாக இருந்துள்ளதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் தாச கவுண்டரின் வாரிசுதாரர்கள் மறைத்து பெறப்பட்ட போலியான பட்டாவின் அடிப்படையில் கடந்த மாதம் 25ஆம் தேதி ஜலகண்டாபுரம் சார்பதிவாளர் பொறுப்பு வகிக்கும் முருகேசன் என்பவர் காலம் சென்ற தாச கவுண்டர் பெயரில் உள்ள யு டி ஆர் ஆவணங்களில் அடிப்படையில் வாரிசு மற்றும் இறப்பு சான்றிதழ் இன்றி சட்டவிரோதமாக பெறப்பட்ட போலியான பட்டாவின் அடிப்படையில் பிறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் சமர்ப்பிக்காமல் காச கவுண்டர் என்பவரின் மகன்கள் நாராயணன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இரு நபர்களும் எழுதி நாராயணன் என்பவரது மகன் சதீஷ்குமார் என்பவருக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட கிரைய ஆவணத்தை பதிவு சட்டம் மற்றும் அதன் விதிகளுக்கு புறம்பாக வாரிசு மற்றும் இறப்பு சான்றிதழ் இன்றி வாய்மொழியாக பாகம் பிரிக்கப்பட்டதாகவும் சட்டத்திற்கு புறம்பாக சொல்லப்பட்ட தகவல்களை ஏற்றுக்கொண்டு உட்கருத்துடன் நிலத்தை செக்கு பந்தியுடன் கரையாம் செய்து கொடுத்துள்ளார் ஜலகண்டாபுரம் சார்பதிவாளர் பொறுப்பு வகிக்கும் முருகேசன். இதற்கு ஆட்சேபனை தெரிவித்து இந்த ஆவணத்தை ரத்து செய்து தருமாறு கடந்த மாதம் 22ஆம் தேதி ஜலகண்டாபுரம் சார் பதிவாளர் முருகேசன் என்பவரிடம் தடங்கள் மனு கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்த மனுவில், சட்டவிரோதமாக எழுதிக் கொடுக்கப்பட்ட கிரைய ஆவணத்தை எழுதிக் கொடுத்த நாராயணன் அர்ஜுனன் மற்றும் கிரையம் பெற்ற சதீஷ்குமார் மற்றும் ஆவணம் தயார் செய்த மணிகண்டன் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பதிவு சட்டம் மற்றும் அதன் விதிகளுக்கு புறம்பாக ஆவண பதிவு செய்து ஜலகண்டாபுரம் சார்பதிவாளர் பொறுப்பு வகிக்கும் முருகேசன் என்பவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் பத்திரப்பதிவு சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவினை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் திருமதி பிருந்தா தேவி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக பாதிக்கப்பட்ட சுகந்தி என்பவருக்கு வழக்கறிஞர் பூமொழி நம்மிடையே தெரிவித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: