சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் சொந்தமே இல்லாத நிலத்தில் பாகம் கொண்டாடும் மயில்சாமி வையாபுரி என்பவர். அத்து மீறி ஆக்கிரமிப்பு செய்ததுடன் கடக்கால் போட்டு வரும் மயில்சாமி வையாபுரி மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் சேலம் COP அலுவலகத்தில் புகார்.
சேலத்தை அடுத்துள்ள நெய்க்காரப்பட்டி கோழிக்காடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மகாலட்சுமி தம்பதியினர். சொந்தமே இல்லாத நிலத்திற்கு பாகம் கொண்டாடி வருவதோடு சம்பந்தப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டுவதற்காக கடக்கால் போட்டு வரும் அதே பகுதியை சார்ந்த மயில்சாமிவையாபுரி என்பவரின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வயதான தம்பதியினர் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அந்த மனுவில் தங்களது மகன் கோவிந்தராஜ் என்பவர் இறந்துவிட்ட நிலையில் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நெய்க்காரப்பட்டி கோடி காடு பகுதியில் சுமார் 1650 சதுர அடி நிலம் இருந்ததாகவும் சம்பந்தப்பட்ட நிலத்தினை தனது மனைவி மற்றும் மகன் பெயரில் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதி செட்டில்மென்ட் செய்து மாணிக்கம் என்பவர் கொடுத்துள்ளதாகவும், தற்பொழுது சம்பந்தப்பட்ட இடத்திற்கு அருகில் வசிக்கும் மயில்சாமி வையாபுரி என்பவர் கடந்த சில மாதங்களாக சம்பந்தப்பட்ட நிலத்தில் தனக்கும் பாகம் உள்ளது எனக் கூறி ஏராளமான பிரச்சனைகளை செய்து வருவதாக மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதனிடையே மாணிக்கம் என்பவர் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு மும்பை சென்று விட்டதாகவும் பிறகு தனது நிலத்தினை மயில்சாமி வையாபுரி அத்துமீறி ஆக்கிரமித்தோடு மட்டுமல்லாமல் வீடு கட்டுவதற்காக களக்கால் போடப்பட்டது தெரியவந்ததை அடுத்து தான் மீண்டும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சேலம் வந்ததாகவும், நில ஆக்கிரமிப்பு குறித்து மயில்சாமி இடம் மாணிக்கம் சென்று தனது நிலத்தை பற்றி கேட்ட பொழுது அவர் மாணிக்கம் என்பவரை அடிக்க முற்பட்டதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. தங்களது இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு கணக்கால் போடுவதற்கு மேல் மட்டம் போட்டு உள்ளதாகவும் எனவே சம்பந்தப்பட்ட இடத்தில் அத்துமீறி வேலை செய்து வரும் மயில்சாமி வையாபுரி என்பவரை தடுத்து நிறுத்தி அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து தங்களது நிலத்தை வயதான தங்களுக்கு மீட்டு தர வேண்டும் என்றும் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
0 coment rios: